தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம்; உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது: அமைச்சர் வன்னியரசு கருத்து

செய்திப்பிரிவு

திருவாரூர்: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. விசாரிப்பதற்காக அழைத்துச் செல்பவர்களின் உயிரைப் பறிப்பதற்கு காவல்துறைக்கு எந்த அதிகாரமும், உரிமையும் இல்லை.

இந்த விஷயத்தில் கூடுதல் பொறுப்போடு காவல்துறை நடந்துகொள்ள வேண்டும். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காணாமல் போன சிறுமி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த சிறுமியை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் யாகம் வளர்த்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவியல் பூர்வமாக மட்டுமே எதையும் கண்டுபிடிக்க முடியும். யாகம் வளர்த்தால் கண்டுபிடித்துவிட முடியும் என்றால் காவல் நிலையம் எதற்கு?

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். சபரிமலை வழக்கிலும் அப்படித்தான் நடந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT