திருவிக நகர் தொகுதி செல்வ விநாயகர் கோயில் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன். | படங்கள்: ம.பிரபு |

 
தமிழகம்

திரு.வி.க நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்

துரை விஜயராஜ்

​திரு.​வி.க.நகர் தொகு​தி​யில் திமுக, அதி​முக, நாம் தமி​ழர் கட்​சி, தமிழக வெற்​றிக் கழகம் உள்​ளிட்ட கட்​சிகள் மற்​றும் சுயேச்​சைகள் என 23 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர்.

திமுக - கே.எஸ்​.ர​விச்​சந்​திரன் திமுக வேட்​பாள​ரான கே.எஸ்​.ர​விச்​சந்​திரன், கடந்த 5 ஆண்டு கால திமுக அரசின் சாதனை​களை முன்​வைத்​து, பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வரு​கி​றார்.

மேலும், நீண்ட கால​மாக நிலு​வை​யில் உள்ள பட்டா கோரிக்​கை​கள் சட்​டரீ​தி​யாகப் பரிசீலிக்​கப்​பட்​டு, தகு​தி​யுள்ள அனை​வ​ருக்​கும் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். சுகா​தா​ர​மான குடிநீர் விநி​யோகம் 24 மணி நேர​மும் உறுதி செய்​யப்​படும் என உறுதி அளித்து வரு​கி​றார்.

ஏகாங்கிபுரம் 74-வது வட்டத்தில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.

அதி​முக - பொற்​கொடி ஆம்​ஸ்ட்​ராங்

அதி​முக வேட்​பாள​ராக, மறைந்த ஆம்​ஸ்ட்​ராங்​கின் மனைவி பொற்​கொடி ஆம்​ஸ்ட்​ராங் போட்​டி​யிடு​கி​றார் வீடு வீடாகச் சென்று பெண்​களைச் சந்​தித்து வாக்கு சேகரித்து வரு​கி​றார்.

போதைப்​பொருள் நடமாட்​டம் இல்​லாத, பாது​காப்​பான திரு.​வி.க நகரை உரு​வாக்​கு​வதே எனது லட்​சி​யம் என அவர் உறு​தி​மொழி அளித்து வரு​கி​றார்.

நாம் தமி​ழர் கட்சி - ஜெகதீஷ் சந்​தர்

நாதக வேட்​பாள​ரான ஜெகதீஷ் சந்​தர், தொகுதி இளைஞர்​களின் எதிர்​காலத்தை மையப்​படுத்தி தரமான கல்வி இலவச​மாகக் கிடைக்க வேண்​டும்.

புளியந்தோப்பில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர்.

திரு.​வி.க நகர் இளைஞர்​கள் கூலிகளாக இல்​லாமல், தகு​திக்​கேற்ற வேலை​வாய்ப்​பைப் பெற்​றுத் தலைநிமிர்ந்து வாழ வழி​வகை செய்​வதே எனது முதல் இலக்கு என உறுதி அளித்து வரு​கி​றார்

தமிழக வெற்​றிக் கழகம் - எம்​.ஆர்​.பல்​லவி

தவெக வேட்​பாள​ரான எம்​.ஆர்​.பல்​ல​வி, வீதி வீதி​யாகச் சென்று வாக்கு சேகரித்து வரு​கி​றார். இத்​தனை காலம் ஆட்சி செய்​தவர்​களுக்கு மாற்​றாக, ஊழலற்ற நேர்​மை​யான நிர்​வாகத்தை வழங்​கத் துடிக்​கும் இந்த இளைய தலை​முறைக்கு ஒரு​முறை வாய்ப்​பளி​யுங்​கள் என வேண்​டு​கோள் விடுத்து வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டுள்​ளார்.

திரு.வி.க நகரில் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் எம்.ஆர்.பல்லவி.

தேர்​தலுக்கு இன்​னும் சில தினங்​களே உள்ள நிலை​யில் திரு.​வி.க,நகர் தொகு​தி​யில் வேட்​பாளர்​களின் பிரச்​சா​ர​மும் தீவிரமடைந்​துள்​ளது.

SCROLL FOR NEXT