அரசின் திட்டங்களை பெண்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன்.

 
தமிழகம்

திருவள்ளூர் தொகுதியில் தீவிர ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள்

கோ.யுவராஜ்

திரு​வள்​ளூர் சட்​டப்​பேரவை தொகுதியில் திமுக சார்​பில் வி.ஜி.​ராஜேந்​திரன், அதி​முக சார்​பில் பி.​வி.ரமணா, நாம் தமிழர் கட்சி சார்​பில் செந்​தில்​கு​மார், தமிழக வெற்றி கழகம் சார்​பில் அருண்​கு​மார், பிற கட்​சிகள் மற்​றும் சுயேட்சை வேட்​பாளர்​கள் என 14 பேர் களத்​தில் உள்​ளனர்.

திமுக - பட்டா கிடைக்க நடவடிக்கை

திமுக வேட்​பாளர் வி.ஜி.​ராஜேந்​திரன் தொகு​திக்​குட்​பட்ட அனைத்து பகு​தி​களுக்​கும் நேரடி​யாக சென்று மக்​களை சந்​தித்து மக்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​றி​யுள்​ள​தாக கூறுகிறார்.

          

பலர் பட்டா கேட்டு கோரிக்கை வைக்​கின்​றனர் பெரும்​பாலானோருக்கு நிறைவேற்​றி​யுள்​ளேன், மற்​றவர்​களுக்​கும் கிடைக்க நடவடிக்கை எடுப்​ப​தாக கூறி வாக்கு சேகரித்து வரு​கிறார்.

கடம்பத்​தூர் பகு​தி​யில் பிரச்​சாரம் செய்த அதி​முக வேட்​பாளார் பி.​வி.ரமணா.

அதிமுக - இந்தத் தேர்தல் திமுகவுக்கு முடிவுரை எழுதும்

அதி​முக வேட்​பாளார் பி.​வி.ரமணா கடந்த 10 ஆண்​டு​களாக திமுக ஆட்​சி​யில் எம்​எல்​ஏ​வாக இருந்​தவர் தொகு​திக்கு என எந்த சிறப்பு திட்​டங்​களை​யும் செயல்​படுத்​த​வில்லை என்​றும், வளர்ச்சி பணி​கள் எது​வும் செய்​ய​வில்லை என்​றும் கூறி வாக்கு சேகரிக்​கிறார்.

மேலும், அதி​முக அரசு கொண்டு வந்த திட்​டங்​களை நிறுத்தி வைத்​துள்​ள​தாக​வும், பலருக்கு பட்டா கொடுக்​க​வில்லை. இந்த தேர்​தல் திமுக​வுக்கு முடிவுரை எழுதும் என்​றும் ரமணா குற்​றம்​சாட்​டு​கிறார்.

துண்டு பிரசுரங்​களை வழங்கி வாக்கு சேகரிக்​கும் நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் செந்​தில்​கு​மார்.

நாதக-இயற்கை வளங்​களை பாது​காப்​பதே முதன்​மை​யான பணி

நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் செந்​தில்​கு​மார், தொகு​தி​யில் ரயில் நிலை​யம், பேருந்து நிலை​யம் என முக்​கிய பகு​தி​களில் டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்​றன, நகர்​புறங்​களில் கஞ்சா புழக்​கம் அதி​க​மாக உள்​ளது.

மேலும், மிகப் பெரிய பிரச்​சினை​யாக மணல் கொள்ளை இருக்​கிறது. இயற்கை வளங்​களை பாது​காப்​பதே தனது முதன்​மை​யான பணி என்​றும், போதை கலாச்​சா​ரத்தை ஒழிப்​பதே நோக்​கம் என கூறுகிறார்.

திருவள்​ளூர் நகர் பகு​தி​யில் பிரச்​சாரத்​தில் ஈடு​பட்​டுள்ள தவெக வேட்​பாளர் அருண்​கு​மார்​.

தவெக-போதை​யில்​லாத தொகு​தி​யாக திரு​வள்​ளூரை மாற்​று​வேன்

தவெக வேட்​பாளர் அருண்​கு​மார், திரு​வள்​ளூர் அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் போதிய மருத்​து​வர்​கள், செவிலியர்​கள், பணி​யாளர்​களை நியமித்​து, அனைத்து வித​மான சிகிச்​சைகளை​யும் வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும்.

போதை​யில்​லாத முன்​மா​திரி தொகு​தி​யாக திரு​வள்​ளூரை மாற்​று​வேன் என்று பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

SCROLL FOR NEXT