மணலி பகுதியில் வாக்கு சேகரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன்.
திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 15 பேர் களத்தில் உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - எல்.சுந்தர்ராஜன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன், ஒப்பந்த தொழிலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் தொழிற்சங்க பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் வேலையாக அனைத்து வீடுகளுக்கும் 24 நேரமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், தொழிலாளர்கள், மீனவர்களுக்கு நியாயமான உரிமைகள் கிடைக்கவும், அவர்கள் வாழ்வு மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வேன் எனவும் கூறி வாக்கு சேகரிக்கிறார்.
அதிமுக - கே.குப்பன்
அதிமுக வேட்பாளரான கே.குப்பன், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திடங்களை முன்வைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளார் கே.குப்பன்.
மேலும், மீனவர்களுக்கு இலவசமாக தரமான வீடுகள் அதிமுக ஆட்சியில் கட்டிகொடுக்கப்பட்டதாகவும், மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி - சத்யா பாஸ்கர்
நாம் தமிழர் கட்சி வேட்பாளரான சத்யா பாஸ்கர், மணலி, எண்ணூரில் உள்ள தொழிற்சாலைகளைக் கண்காணித்து மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவொற்றியூர் மார்கெட் பகுதியில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா பாஸ்கர்.
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும், மிக முக்கியமாக தொகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்து பரப்புரை செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் - செந்தில்குமார்
தவெக வேட்பாளரான செந்தில்குமார், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இளைஞர்களுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.
பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் செந்தில்குமார்.
சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்குத் தீர்வு, அபாயகரமான ரசாயன தொழிற்சாலை அகற்றப்படும் என வாக்குறுதி அளித்து நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
வாக்குப்பதிவுக்கு சில தினங்களே உள்ள நிலையில் திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி யார் பக்கம் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.