சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, எழில் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஜெ.ஜான் எபினேசர்.

 

படங்கள்: ம.பிரபு |

தமிழகம்

ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள்

ச.கார்த்திகேயன்

தமி​ழ​கத்​தின் மிகப்​பெரிய காசிமேடு மீன்​பிடி துறை​முகம் அமைந்​திருக்​கும் ஆர்​.கே.நகர் தொகுதியில் திமுக சார்​பில் தற்​போதைய எம்​எல்ஏ ஜெ.ஜான் எபினேசர் மீண்​டும் போட்​டி​யிடு​கி​றார்.

அதி​முக சார்​பில் ஆர்​.எஸ்​.​ராஜேஷ், தவெக சார்​பில் மரிய வில்​சன், நாம் தமி​ழர் கட்சி சார்​பில் வெண்​ணிலா தாயு​மான​வன் ஆகி​யோர் போட்​டி​யிடு​கின்​ற​னர்.

திமுக - தேர்​தல் அறிக்கை பிர​தானம்

திமுக வேட்​பாளர் ஜான் எபினேசர், கொருக்​குப்பேட்டை எழில் நகர் உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் நேற்று வாக்கு சேகரித்​தார். விளை​யாட்டு வளாகங்​கள், ரேஷன் கடைகள் கட்​டியது உள்​ளிட்ட சாதனை​களை எடுத்​துரைத்​தார்.

          

மீண்​டும் திமுக ஆட்​சிக்கு வந்​தால் மகளிர் உரிமைத்​தொகை ரூ.2 ஆயிர​மாக உயர்​வு, ரூ.8 ஆயிரம் கூப்​பன் வழங்​கும் ‘இல்​லத்​தரசி’ திட்​டம் உள்​ளிட்ட வாக்​குறு​தி​களைக் கூறி களமாடி வரு​கி​றார்.

கொருக்குப்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்.

அதி​முக - சட்​டம் ஒழுங்கை பாது​காக்க உறுதி

அதி​முக வேட்​பாளர் ஆர்​.எஸ்​.​ராஜேஷ், கொருக்​குப்​பேட்டை ஜெ.ஜெ.நகர், மீனாம்​பாள் நகர் பகு​தி​களில் நேற்று வாக்கு சேகரித்​தார்.

அதி​முக ஆட்சி அமைந்​தால் சட்​டம் ஒழுங்​கு, பெண்​களின் பாது​காப்​புக்கு முக்​கி​யத்​து​வம், ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ரூ.10 ஆயிரம், ஃபிரிட்​ஜ், மாதந்​தோறும் குடும்​பத் தலைவி​களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்​கப்​படும் என வீடு வீடாகச் சென்று வாக்​குறு​தி​யளித்து வாக்கு சேகரித்​தார்.

தண்டையார்பேட்டை பகுதியில் தொண்டர் களுடன் சென்று வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் வெண்ணிலா தாயுமானவன்.

நாதக - சுற்​றுச்​சூழல் காக்​கப்​படும்

நாதக வேட்​பாளர் வெண்​ணிலா தாயு​மான​வன், தண்​டை​யார்​பேட்டை பகு​தி​யில் நேற்று வீடு​வீ​டாகச் சென்று வாக்கு சேகரித்​தார்.

அப்​போது, சிபிசிஎல், ஐஓசிஎல் போன்ற நிறு​வனங்​கள் சிறப்பு கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கொண்​டு​வரப்​பட்டு சுற்​றுச்​சூழல் காக்​கப்​படும். பக்​கிங்​ஹாம் கால்வா​யில் கழி​வுநீர் கலப்​பதை தடுத்​து, சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்​கப்​படும் என்பன உள்​ளிட்ட வாக்​குறு​தி​களை அளித்து வாக்கு சேகரித்​தார்.

காசிமேடு பகுதியில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் என்.மரிய வில்சன்.

தவெக - உயர்​கல்வி கனவு​களுக்கு கைகொடுப்​போம்

தவெக வேட்​பாளர் என்​.மரிய வில்​சன், பழைய வண்​ணாரப்​பேட்டை இளைய தெரு​வில் நேற்று வாக்கு சேகரித்​தார்.

பட்டா கிடைக்​காதவர்​களுக்கு பட்டா வழங்க நடவடிக்​கை, ஒவ்​வொரு ஆண்​டும் பொருளா​தா​ரத் தடை​யால் உயர்​கல்வி படிக்க முடி​யாத 100 பேரை உயர் கல்வி படிக்க உதவும் ‘கன​வு​களுக்கு கை கொடுப்​போம்’ திட்​டத்தை செயல்​படுத்​து​வோம் என வாக்​குறுதி அளித்​தார். ஆர்.கே.நகர் தொகு​தி​யில் பிர​தான கட்​சி​களின் பிரச்​சா​ரம் சூடு பிடித்​துள்​ள​தால், தேர்​தல் களம் அனலாகத் தகிக்​கிறது.

SCROLL FOR NEXT