எழும்பூர் தொகுதி, புரசைவாக்கம் தானா தெருவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா

 
தமிழகம்

எழும்பூர் தொகுதியில் வீதிதோறும் வலம் வரும் வேட்பாளர்கள் - களம் எப்படி?

சி.பிரதாப்

எழும்​பூர் தொகு​தி​யில் திமுக, அதி​முக, நாம் தமி​ழர் கட்​சி, தமிழக வெற்​றிக் கழகம், தமிழக வாழ்​வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்​சிகள் மற்​றும் 10 சுயேச்​சைகள் என மொத்​தம் 18 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​ற​னர்.

திமுக - தமி​ழன் பிரசன்னா

திமுக சார்​பில் அக்​கட்​சி​யின் செய்​தித்​தொடர்பு இணை செய​லா​ள​ராக உள்ள தமி​ழன் பிரசன்னா களம் காண்​கி​றார். கடந்த 5 ஆண்​டு​களில் தொகு​தி​யில் செய்த சாதனை​களை​யும், தேர்​தல் வாக்​குறு​தி​களை​யும் பட்​டியலிட்டு ஆதரவு திரட்டி வரு​கி​றார்.

மேலும், பிரச்​சா​ரத்​தில் மக்​களின் குறை​களைக் கேட்டு அவற்றை நிறை​வேற்​று​வ​தாக​வும், விளை​யாட்டு மைதானம், பயிற்சி மையங்​கள் ஏற்​படுத்தி தரு​வ​தாக​வும் வாக்​குறுதி அளித்து வாக்​கு​களை சேகரித்து வரு​கி​றார்.

அதி​முக - அபிஷேக் ரங்​க​சாமி

அதி​முக தென்​சென்னை வடக்கு மாவட்ட எம்​ஜிஆர் இளைஞரணி செய​லா​ளர் அபிஷேக் ரங்​க​சாமி அதிமுக வேட்பாளராகப் போட்​டி​யிடு​கி​றார்.

சூளை, கேபி பார்க் பகுதியில் அதிமுக வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமியை மாலை அணிவித்து வரவேற்ற வாக்காளர்கள்.

திமுக​வின் ஆட்​சி​யில் நிறை​வேற்​றாமல் இருக்​கும் வாக்​குறு​தி​களை சுட்​டிக்​காட்​டி​யும், தொகு​தி​யில் நில​வும் பிரச்​சினை​களைப் பட்​டியலிட்​டும் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கி​றார்.

மேலும், போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்​கை, ஒவ்​வொரு வீட்​டுக்​கும் தூய்​மை​யான குடிநீர் கொண்டு வரப்​படும் என்பன உள்​ளிட்ட வாக்​குறு​தி​களை​யும் அவர் முன்​வைக்​கி​றார்.

நாம் தமி​ழர் கட்சி - சரண்யா

நாதக சார்​பில் சரண்யா போட்​டி​யிடு​கி​றார். தொகு​தி​யில் குடிநீர் தட்​டுப்​பாடு, பாதாளச் சாக்​கடை போன்ற மக்​களின் அன்​றாடத் தேவை​கள் நிறை​வேற்​றப்​படும். கல்​வி, மருத்​து​வம், குடிநீர் ஆகியவை இலவச​மாக வழங்​கப்​படும் போன்ற வாக்​குறு​தி​களை வழங்​கி, வீதி வீதி​யாக சென்று மக்​களை சந்​தித்து வாக்கு சேகரித்து வரு​கி​றார்.

சூளை பகுதியில் ஆட்டோவில் தெரு, தெருவாகச் சென்று வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் சரண்யா.

தமிழக வெற்​றிக் கழகம் - ராஜ்மோகன் தவெக வேட்​பாள​ராக கட்​சி​யின் துணைப் பொதுச்​செய​லா​ளர் ராஜ்மோகன் போட்​டி​யிடு​கி​றார். ஊழல், போதைப்​பொருள் ஒழிப்​பு, பெண்​களுக்​குப் பாது​காப்பு ஆகிய​வற்றை பிரச்​சா​ரத்​தில் முதன்​மை​யாகக் கொண்​டுள்​ளார்.

வாக்கு சேகரிப்பின்போது குழந்தையைக் கொஞ்சி மகிழும் தவெக வேட்பாளர் ராஜ்மோகன்.

மேலும், மக்​களு​டன் கலந்​துரை​யாடி வாக்கு சேகரித்து வரு​கி​றார். எழும்பூர் தொகு​தி​யில் பிரதான 4 கட்​சிகளுக்​கிடையே போட்டி பலமாக உள்​ளது. இதனால் வெற்​றிக் கனியை பறிப்​பது யார் என்ற எதிர்​பார்ப்பு எகிறுகிறது.

SCROLL FOR NEXT