தமிழகம்

நீட் தேர்வு ரத்து: மத்தியக் குழுவிடம் முதல்வர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: நந்​தன் நிலேகனி தலை​மையி​லான மத்​திய அரசின் தேர்வு சீர்​திருத்​தங்​களுக்​கான உயர்​நிலை பணிக் குழு​வினர் தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை நேற்று சந்தித்தனர்.

இந்த சந்​திப்​பில் அமைச்சர் ராஜ்மோகன், தலை​மைச் செயலர் சாய்​குமார், மத்​தி​யக் குழு உறுப்​பினர்​கள் அனிதா கர்​வால், வீ.காமகோடி, சங்​கர் மரு​வாடா மற்​றும் துறை அலு​வலர்​கள் பங்​கேற்​றனர். அப்​போது, மருத்​து​வப் படிப்​புக்​கான நீட் தேர்வு, இதர உயர்​கல்வி சேர்க்​கைக்​கான தேர்​வு​களுக்கு அரசு சார்​பில் எதிர்ப்பு தெரி​விக்​கப்​பட்​டது.

அதற்​குப் பதிலாக பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்​பெண்​களையே சேர்க்​கைக்​கான அடிப்​படை​யாகக் கொள்ள வேண்​டும் என்று முதல்​வர் கேட்​டுக் கொண்​டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT