கோப்புப் படம்

 
தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு நவ.13-ல் கேக்

செய்திப்பிரிவு

சென்னை: தொடக்​கக்​கல்வி இயக்​குநர் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: குழந்​தைகள் தினத்​தைக் கொண்​டாடும் வகை​யில் அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களின் மாணவர்​கள், ஆசி​ரியர்​கள், பணி​யாளர்​களுக்கு கேக் வழங்​கப்பட உள்ளது.

இதையொட்டி விற்​பனையாளர்​கள் கேக் பார்​சல்​களை நவம்​பர் 10-ம் தேதிக்​குள் ஒப்​படைப்​பர். இதையடுத்து மாணவர்​களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்​டைகளும், மற்றவர்களுக்கு கேக்குகளும் நவம்​பர் 13-ம் தேதி​யன்றே (வெள்​ளிக்​கிழமை) வழங்க வேண்​டும்.

நவம்​பர் 14 சனிக்​கிழமை என்​ப​தால் முதல் நாளே கேக் விநியோகிக்​கப்​படு​கிறது. அனைத்து மாணவர்​களுக்​கும் வாழ்த்து அட்டை கிடைத்​துள்​ளதை உறுதிசெய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT