தமிழகம்

“பழனிசாமி உள்ளிட்ட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய மனு அளித்துள்ளோம்” - சி.விஜயபாஸ்கர்

தமிழினி

சென்னை: “கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளோம்” என்று அதிமுக எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பெரும்பான்மையான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்ற குழு தலைவராகவும், சி.விஜயபாஸ்கர் ஆகிய என்னை சட்டமன்ற குழுவின் கொறடாவாகவும் நியமித்தார்கள்.

அதைத் தொடர்ந்து, நேற்று தவெக அரசின் மீது நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களுக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தியிருந்தோம். 47 சட்டமன்ற உறுப்பினர்களில் 25 பேர், கொறடா உத்தரவை ஏற்று நடந்தார்கள்.

இந்நிலையில், கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட இபிஎஸ் உள்ளிட்ட 22 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளோம். பெரும்பான்மையான உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT