பழனிசாமி, சி.வி.சண்முகம்

 
தமிழகம்

அதிமுகவில் ஓரங்கட்டப்படுகிறார் சி.வி.சண்முகம்? - புதிய நிர்வாகிகள் நியமனத்தில் பழனிசாமி கறார்

இரா.தினேஷ்குமார்

விழுப்புரம்: பிரிந்து சென்றவர்களுக்கு அதிமுகவில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், கால் நூற்றாண்டாக கோலோச் சிய முன்னாள் அமைச்சரும், மயிலம் எம்எல்ஏவுமான சி.வி.சண்முகத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஓரங்கட் டியிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயல லிதா அமைச்சரவையில் (2001-06) இளம் அமைச்சரானவர் அவ்வை சண்முகம். விழுப்பு ரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் வென்றவர்.

அவ்வையார் குப்பம் சொந்த கிராமம் என்பதால் அவ்வை சண்முகம் என்ற அடையாளத்துடன் அழைக்கப்பட்டார். அக்காலத்தில் அடிக்கடி அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்ததால், ஜோதிட கணிப்புப்படி அவ்வை என்பதை நீக்கிவிட்டு, சி.வி.சண்முகம் என மாற்றிக் கொண்டார்.

2004-ல் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, அதிமுகவையும் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்தது. ராம தாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சி.வி.சண்முகத்துக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுத்தார். மாவட்ட செயலாளர் பதவியையும் வழங்கினார்.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமகவை எதிர்த்து திண்டிவனம் தொகுதியில் சி.வி.சண்முகம் களம் கண்டார். வாக்குப்பதிவு முடிந்ததும், ஆதரவாளர்களுடன் வீட்டில் இருந்த சி.வி.சண்முகம் மீது கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது. காருக்கு அடியில் புகுந்து உயிர் தப்பினார்.

அப்போது அதிமுக தொண்டர் முருகானந்தம் கொல்லப்பட்டார். கடும் போட்டிக்கு இடையே தேர்தலில் வென்றார். கொலைவெறி தாக்குதலுக்கு பிறகு ஜெயலலி தாவிடம் அவரது செல்வாக்கு உயர்ந்தது. இந்தச் சூழலில் 2011-16-ம் ஆண்டு ஜெயலிலதா அமைச்சரவையில் 2-வது முறையாக இடம் பிடித்த சி.வி.சண்முகத்தால், அமைச்சர் பதவியை தக்க வைக்க முடியவில்லை.

2012 அக்டோபரில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. 2016 தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. சட்டத்துறை அமைச்சரானார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்த லட்சுமணன், ஓ.பன்னீர் செல்வத்துடன் சென்றதால், சி.விசண் முகம் மீண்டும் மாவட்ட செயலாளர் ஆனார்.

கட்சி மற்றும் ஆட்சி யில் சி.வி.சண்முகத்துடன் இணைந்து அவரது சகோதரர் ராதாகிருஷ்ணனின் ஆதிக்கம் செலுத்துவது குறித்து பழனி சாமியிடம் புகார்கள் சென்றும், சி.வி.சண்முகத்தை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இதற்கிடையில் அதிமுகவில் இருந்து வெளியேறி 2020-ல் திமுகவில் இணைந்தார் லட்சுமணன். 2021-ல் விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட லட்சுமணனிடம் சி.வி.சண்முகம் தோல்வி அடைந்தார். பின்னர் தனது செல்வாக்கை பயன்படுத்தி மாநிலங்களவை உறுப்பினரானார்.

கூட்டணி முடிவு, நிர்வாகிகள் நியமனம் மற்றும் கட்சியின் செயல்பாடு என அனைத்திலும் பழனிசாமியின் கருத்துக்கு ஆட்சேபம் தெரி வித்து வந்தார். தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்ததால் பழனிசாமிக்கும், சி.வி.சண் முகத்துக்கும் இடையே உரசல் அதிகரித்தது.

2026 சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் பழனிசாமிக்கு எதிராக எம்எல்ஏக்களை திரட்டிய சி.வி.சண்முகத்துக்கு, அவர்களை தக்கவைக்க முடியவில்லை. கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு பரிந்துரைத்தார் பழனிசாமி. அனைவரது கட்சி பதவிகளையும் பறித்தார்.

தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரும் சேர்க்கப்படாததால் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னாள் அமைச் சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, காமராஜ் உள்ளிட்ட 19 பேரும் பழனிசாமியை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். சி.வி.சண்முகம் உட்பட 21 எம்எல்ஏக்கள் பதவி தப்பியது.

ஆனால் பறிக்கப்பட்ட கட்சி பதவிகள் வழங்கப்படவில்லை. அதேநேரத்தில் சி.வி.சண்முகம் பழனிசாமியை சந்திக்காமல் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதன்பிறகு எஸ்.பி.வேலு மணி உள்ளிட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தியும் சி.வி.சண்முகம் உடன்படவில்லை.

தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட செயலாளர், அதிமுக அமைப்பு செயலாளர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தார். இணைந்து செயல் படட்டும், பதவிகளை பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என சி.வி.சண்முகம் விஷயத்தில் பழனிசாமி கறார் காட்டுகிறார். இதன் வெளிப்பாடுதான் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அதிமுக தலைமையின் நியமன அறிக்கை.

எதிர்ப்பை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எம்.ஆர். விஜய பாஸ்கர், கே.பி. அன்பழகன், காமராஜ், கே.சி.வீரமணி உள்ளிட்டோர் அதிமுக அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் சி.வி.சண் முகம் பெயர் இடம்பெறவில்லை. தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதிமுகவில் கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த சி.வி.சண்முகத்தை ஓரங்கட்டியிருக்கிறார் பழனிசாமி. இதனால் அவரது ஆதரவாளர் கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதிலிருந்து பழனிசாமி பின்வாங்க மாட்டார் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இதனால் சி.வி.சண்முகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

SCROLL FOR NEXT