மாதிரி படம்

 
தமிழகம்

மதுராந்தகத்தில் 893, தாராபுரத்தில் 1,201 தபால் வாக்குகள் பதிவானது

செய்திப்பிரிவு

மதுராந்தகம் / தாராபுரம்: மது​ராந்​தகத்தில் 893 தபால் வாக்​கு​களும் தாராபுரம் தொகுதியில் 1,201 தபால் வாக்குகளும் பதி​வாகி​யுள்​ள​தாக தேர்​தல் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

மது​ராந்​தகம் மற்றும் தாராபுரம் சட்​டப்​பேரவை தொகுதிகளுக்கான இடைத்​தேர்தல் வரும் அக்​-6-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்காக, மாவட்டதேர்​தல் நிர்​வாகம் பல்​வேறு முன்​னேற்​பாட்டுப் பணி​களை மேற்​கொண்டு வரு​கின்றன.

இந்​நிலை​யில், மதுராந்தகத்தில் தபால் வாக்​குகளை சேகரிக்​கும் பணிகள் நேற்று தொடங்​கின. இதற்​காக, தொகு​தி​யின் தேர்​தல் நடத்​தும் அலு​வலர் உத்​தர​வின்பேரில் 8 குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இக்​குழு​வினர் மூலம், மேற்​கண்ட தொகுதி​யில் 85 வயதுக்கு மேற்​பட்​ட முதியோர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​கள் உள்பட 931 வாக்​காளர்​கள் தபால் வாக்​கும் வழங்க ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்தன.

மேலும், இந்தச் சிறப்பு குழு​வினர் 85 வயதுக்​கும் மேற்​பட்ட முதி​யோர் வீடு​களுக்​கே சென்று வாக்​கு​களை பெறும் பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், 29-ம் தேதி நில​வரப்​படி மது​ராந்​தகம் தொகு​தி​யில் 893 தபால் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ள​தாக தேர்​தல் நிர்​வாக வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

தாராபுரம்: இதேபோல் தாராபுரம் தொகு​தி​யில், தபால் வாக்​களிக்​கத் தகுதிபெற்ற 1,236 பேரில் 1,201 பேர் தங்​களது வாக்​கு​களைப் பதிவு செய்​துள்​ளனர்.

இங்கு கடந்த 22-ம் தேதி முதல் தேர்​தல் அலு​வலர்​கள் அடங்​கிய குழுக்​கள், தகு​தி​யான வாக்​காளர்​களின் வீடு​களுக்கே சென்று தபால் வாக்​கு​களைப் பதிவு செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர். இதற்​காக மொத்​தம் 30 குழுக்​கள் அமைக்​கப்​பட்​டு, வாக​னங்​களில் சென்று வாக்​காளர்​களிடம் இருந்து தபால் வாக்​கு​கள் பெறப்​பட்​டன.

மூத்த குடிமக்​கள் மற்​றும் மாற்​றுத்​திற​னாளி​களிடம் தபால் வாக்கு பெறும் பணி நேற்​றுடன் நிறைவடைந்த நிலை​யில், தேர்​தல் பணி​யில் உள்ள காவலர்​களுக்​கான தபால் வாக்கு செலுத்​தும் பணி வரும் சனிக்​கிழமை நடை​பெற உள்​ள​தாக அலு​வலர்​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT