தமிழகம்

‘கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன’

போக்குவரத்துத் துறை செயலாளர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: விநாயகர் சதுர்த்தி தொடர் விடு​முறையை முன்னிட்டு, கிளாம்​பாக்​கம் பேருந்து முனை​யத்​தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் சார்​பில் இயக்கப்படும் சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கத்தை போக்குவரத்துத் துறை செயலர் இல.நிர்​மல் ராஜ் நேற்று பார்வையிட்​டு, ஆய்வு செய்​தார்.

தொடர்ந்​து, ஆயுத பூஜை தொடர் விடு​முறை மற்​றும் தீபாவளி பண்​டிகை தொடர் விடு​முறை நாட்​களில் மேற்​கொள்ள வேண்​டிய சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கம் மற்​றும் முன்​னேற்​பாடு​கள் குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் கிளாம்​பாக்​கத்​தில் உள்ள கூட்ட அரங்​கில் நடை​பெற்​றது.

பின்​னர் போக்​கு​வரத்​துத் துறை செயலர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விநாயகர் சதுர்த்தி தொடர் விடு​முறையை முன்​னிட்டு சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கத்தை பார்​வை​யிட்​டு, பல்​வேறு ஊர்​களுக்கு செல்​லக்​கூடிய பயணி​களுக்கு உரிய பேருந்து வசதி செய்​யப்​பட்​டுள்​ளதா என ஆய்வு மேற்​கொண்​டோம்.

ஆயுத பூஜை தொடர் விடு​முறை மற்​றும் தீபாவளி பண்​டிகை தொடர் விடு​முறை நாட்​களுக்கு தற்​காலிக பேருந்து நிலை​யங்​கள் அமைப்​பது குறித்​தும், பேருந்​துகளை எந்​ததெந்த இடத்​தி​லிருந்து இயக்​கு​வது என்​பது குறித்​தும், போக்​கு​வரத்து நெரிசல் மற்​றும் பயணி​களுக்கு எவ்​வித இடையூறு இன்றி சீரான போக்​கு​வரத்தை உறுதி செய்​திட​வும் ஆய்வு மேற்​கொள்​ளப்பட உள்​ளது.

இதன் பின்​னர் எங்​கள் பரிந்​துரைகளை போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர், தலை​மைச் செய​லா​ளர் ஆகி​யோ​ருக்கு தெரி​வித்​து, உரிய முடிவு​கள் எடுக்​கப்​படும். கிளாம்​பாக்​கத்​தில் இருந்து பேருந்து எது​வும் கால​தாமத​மாக இயக்​கப்​பட​வில்​லை, சரி​யான நேரத்​தில் இயக்​கப்​பட்​டன.

பயணி​கள் நிறுத்​தி வைக்​கப்​பட்​டுள்ள பேருந்​துகளில் ஏறி உடனே பேருந்​துகளை இயக்க வேண்​டும் என்​கின்​ற​னர். குறித்த நேரத்தில்தான் பேருந்​துகளை இயக்க முடி​யும். இந்த பிரச்சினையை தடுக்க பேருந்​துகளில் புறப்​படும் நேரத்தை குறிப்பிடு​மாறு ஓட்​டுநர், நடத்​துநருக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT