பிருந்தா காரத் |கோப்புப் படம்

 
தமிழகம்

“​பாஜக புல்டோசரை தடுத்து நிறுத்துவோம்” - பிருந்தா காரத் சொல்கிறார்

செய்திப்பிரிவு

அதி​முக​வின் பின்​னால் ஒளிந்​து​கொண்டு வரும் பாஜக புல்​டோசரை தமிழகத்​தின் எல்​லை​யிலேயே தடுத்து நிறுத்​து​வோம் என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மத்​திய அரசி​யல் நிர்​வாகக் குழு உறுப்​பினர் பிருந்தா காரத் தெரி​வித்​தார்.

திரு​வாரூர் மாவட்​டம் திருத்​துறைப்​பூண்​டி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வேட்​பாளர் க.மாரி​முத்​துவை ஆதரித்து பிருந்தா காரத் பேசி​னார். பின்​னர், அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 5 ஆண்​டு​களில் திமுக அரசு ஆற்​றி​யுள்ள பணி​களின் அடிப்​படை​யில், நாங்​கள் நிச்​ச​யம் வெற்றி பெறு​வோம். இங்கு அமைந்​துள்ள எங்​களது கூட்​டணி மிக​வும் வலிமை​யானது.

          

சந்​தேகத்​துக்கு இடமின்றி இக்​கூட்​டணி தமிழகத்​தில் மாபெரும் வெற்றி பெறும். ஆனால், மறு​புறம் அமைந்​துள்ள அதி​முக- பாஜக கூட்​டணி என்​பது முற்​றி​லும் சந்​தர்ப்​ப​வாத கூட்​ட​ணி. அதி​கார வேட்​கையை தவிர, இவ்​விரு கட்​சிகளுக்​கும் இடையே பொது​வான அம்​சம் வேறு என்ன இருக்க முடி​யும்?

நாடு முழு​வதும் இந்​திய அரசி​யலமைப்பை தனது புல்​டோசர் கொண்டு பாஜக நசுக்கி வரு​கிறது. துர​திர்​ஷ்ட​வச​மாக​வும், வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்க வகை​யிலும், இந்​தி​யா​வின் பன்​முகத்​தன்​மைக்​கும், தமிழகத்​தின் கலாச்​சா​ரத்​துக்​கும் எதி​ராகச் செயல்​பட்​டுக் கொண்டு வரும் பாஜகவை, தமிழகத்​தில் காலூன்​று​வதற்கு அதி​முக வழி​வகை செய்து வரு​கிறது. இந்த புல்​டோசர் அணுகு​முறை இந்​தி​யா​வையே சீரழித்து வரு​கிறது. எனவே, அதி​முக​வின் பின்​னால் ஒளிந்​து​கொண்டு வரும் பாஜக புல்​டோசரை தமிழகத்​தின் எல்​லை​யிலேயே தடுத்து நிறுத்​து​வதை உறுதி செய்​வோம்​. இவ்​வாறு அவர்​ கூறினார்.

SCROLL FOR NEXT