தமிழகம்

அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி: தமிழக அரசு ரூ.8.45 கோடி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

சென்னை: பள்​ளிக் கல்​வித் துறை செயலர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா வெளி​யிட்ட அரசாணை: தமிழகத்​தில் வாசிப்​புப் பழக்​கத்தை ஊக்​குவிக்​கும் வகை​யில் அனைத்து மாவட்​டங்​களி​லும் புத்​தகக் கண்​காட்​சிகள் நடத்​து​வதற்கு முடிவு செய்​யப்​பட்​டது. இதையடுத்து 2022-23-ம் ஆண்​டில் மாவட்​டங்​கள் ஏ, பி, சி என 3 வகை​யாகப் பிரிக்​கப்​பட்​டன.

ஏ பிரிவுக்கு ரூ.17.50 லட்​சம், பி பிரிவுக்கு ரூ.14 லட்​சம், சி பிரிவுக்கு ரூ.12 லட்​சம் வீதம் வீதம் மொத்​தம் ரூ.4.96 கோடி​யில் புத்தகக் கண்​ காட்​சிகள் நடத்​தப்​பட்​டன.

2023-24 மற்​றும் 2024-25 ஆகிய ஆண்​டு​களி​லும் அனைத்து மாவட்​டங்​களி​லும் புத்​தகக் கண்காட்​சிகள் வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்​டன. நடப்பு கல்​வி​யாண்​டில் (2026-27) தமிழகத்​தின் அனைத்து மாவட்​டங்​களி​லும் புத்​தகக் கண்​காட்​சிகளை நடத்​து​வதற்​காக, மொத்​தம் ரூ.8.45 கோடி நிதியை அரசு ஒதுக்​கீடு செய்துள்​ளது.

பொது நூலக இயக்​குநர் இந்த நிதியை மாவட்​டக் கரு​வூலங்​கள் மூலம் முன்​பண​மாகப் பெற்​று, புத்தகக் கண்​காட்​சிகளை நடத்​திக் கொள்​ளலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT