தமிழகம்

சென்னையில் இருந்து புறப்படவிருந்த கோவா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

5 மணி நேரம் நடந்த சோதனையால் பரபரப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் இருந்து கோவா புறப்​பட இருந்த விமானத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​ட​தால், 5 மணி நேரம் சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது.

சென்​னை​யில் இருந்து நேற்று முன்​தினம் மாலை 5.40 மணிக்கு கோவாவுக்கு இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்​தது. அந்த விமானத்​தில் 176 பயணிகள், 6 விமான ஊழியர்​கள் என மொத்​தம் 182 பேர் இருந்​தனர். விமானத்​தில் உள்ள ஒரு கழிப்​பறையை ஆய்வு செய்த போது, அங்கு வெடிகுண்​டுகள் வைக்​கப்​பட்​டுள்​ள​தாகவும், விமானம் நடுவானில் பறந்து செல்​லும் போது வெடிக்​கும் என்று எழுதி ஒட்​டப்​பட்​டிருந்​தது.

உடனே, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​விக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்​கள் மோப்ப நாய்​களு​டனும், பாது​காப்பு படை அதி​காரி​கள், அதிரடிப்​படை வீரர்​களும் வந்​தனர். விமானத்​தில் இருந்த பயணிகள் அனைவரும் சோதனை செய்​யப்​பட்டு கீழே இறக்​கப்​பட்​டனர். தொடர்ந்து, விமானத்​தில் இருந்த பயணிகள் மற்​றும் ஊழியர்​களின் உடைமை​களும் சோதனை செய்​யப்​பட்டு, கீழே இறக்​கப்​பட்​டது. இந்த சோதனை இரவு 10 மணி வரை நீடித்​தது.

ஆனால் விமானத்​தில் வெடிகுண்​டுகள் எது​வும் இல்லை என்​பதை அதி​காரி​கள் உறுதி செய்​தனர். இதையடுத்து, அந்த விமானம் ஐந்​தரை மணி நேரம் தாமத​மாக, இரவு 11.10 மணிக்கு சென்​னையில் இருந்து கோவா புறப்​பட்​டுச் சென்​றது. இந்த வெடிகுண்டு மிரட்​டல் குறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT