தமிழகம்

ஆளுநராக நியமிக்கப்படுவாரா ஓபிஎஸ்? - தமிழக தேர்தலில் முழுப்பலன் பெற பாஜக திட்டம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தமிழத்தில் தேர்​தல் வரவுள்ள நிலை​யில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை (என்​டிஏ) வலுப்​படுத்​து​வ​தில் பாஜக தீவிரம் காட்​டு​கிறது.

அதி​முக தலை​வர்​களை ஒன்​றிணைத்​தால் மட்​டுமே திமுகவை வெல்ல முடி​யும் என்​பது பாஜக​வின் கணிப்​பாக உள்​ளது. கொங்கு சமூகத்​துடன் தேவர் சமூக​மும் இணைந்​தால்​ தான் வெற்றி என்று நினைக்கிறது. ஆனால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைவதை கடுமை​யாக எதிர்க்​கிறார் இபிஎஸ். புதிய கட்சி தொடங்கி தினகரன் வழி​யில் கூட்​டணி சேர​வும் ஓபிஎஸ் தயா​ராக இல்​லை. இச்​சூழலை சமாளிக்க, ஓபிஎஸ்-ஐ ஆளுநராக நியமிப்பது குறித்து பாஜக பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

          

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் பாஜக​வின் தேசிய நிர்​வாகி​கள் வட்​டாரம் கூறுகை​யில், "ஓபிஎஸ்-ஐ ஆளுந​ராக்க இபிஎஸ் தடை​யாக இருக்க மாட்​டார். ஓபிஎஸ்​-க்கு இப்​ப​தவி வழங்​கு​வ​தால் அவரது சமூகத்​தினரும் ஆதர​வாளர்​களும் மகிழ்ச்சி அடை​வார்​கள். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி இறுதி முடிவு எடுப்​பார்" என்று தெரி​வித்​தனர்.

மணிப்​பூர் ஆளுந​ராக இருந்த தமிழக பாஜக​வின் மூத்த தலை​வர் இல.கணேசன் 2025 ஆகஸ்​டில் மறைந்​தது முதல் அப்​ப​தவி காலியாக உள்​ளது. இதன் கூடு​தல் பொறுப்பு நாகாலாந்​தின் ஆளுந​ர் ஏ.கே.பல்​லா​விடம் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

அதே​போல், மற்​றொரு தமிழரும் பாஜக தலை​வரு​மான சி.பி.​ராதா கிருஷ்ணன், மகா​ராஷ்டிரா ஆளுந​ராக இருந்​தார். இவர் குடியரசுத் துணைத் தலை​வ​ரானார். இதனால் மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பு, கூடு​தலாக குஜ​ராத் ஆளுநர் ஆச்​சார்ய தேவரத்​திடம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​விரு மாநிலங்​களில் ஏதேனும் ஒன்​றில் ஓபிஎஸ் ஆளுநர் பத​வி​யில் அமர்த்​தப்​படு​வார்​ என்​ற எதிர்​பார்ப்​பு உரு​வாகி உள்​ளது.

SCROLL FOR NEXT