தமிழகம்

புதுச்சேரி பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பாஜக புதிய செயல் தலைவர் நிதின் நிபின் நாளை சந்திப்பு!

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பாஜக புதிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நிபினின் முதல் கட்சி நிகழ்வு புதுச்சேரியில் நடக்கிறது. பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் நாளை மாலை ஆலோசனை நடத்தி கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.

அகில இந்திய பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் ஜே.பி.நட்டா பொறுப்பேற்றார். அவரது 3 ஆண்டு பதவிக் காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. மக்களவைத் தேர்தல் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் அமைப்பு தேர்தல் முடியாதது உள்ளிட்ட காரணங்களால் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இதனால் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படாமல் இருந்தார். ஏற்கெனவே தேசிய தலைவராக உள்ள நட்டா மத்திய சுகாதார அமைச்சராகவும் உள்ளார். இதற்கிடையே, பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவரை நியமிக்க, கட்சி மேலிடத்தில் தொடர்ந்து ஆலோசனை நடத்தி பாஜக தலைமையானது செயல் தலைவராக பிஹார் மாநிலத்தை சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நிபினின் முதல் கட்சி நிகழ்வு புதுச்சேரியில் நடக்கிறது. பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் நாளை மாலை ஆலோசனை நடத்தி கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.

தேசிய செயல் தலைவர் வருகையொட்டி புதுவை பாஜக மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் இன்று காலை டெல்லி சென்றுள்ளனர். அவருடன் கலந்து ஆலோசனை நடத்தினர். பின்னர் இவர்கள் இன்று இரவு புதுச்சேரி திரும்பி நாளை நடக்கும் வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யவிருக்கின்றனர்.

SCROLL FOR NEXT