தமிழகம்

தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதன் மூலம் பெண்களுக்கு எதிரான கட்சி என்பதை நிரூபித்த திமுக, காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: மகளிர் இடஒதுக்​கீட்​டுடன் நேரடி​யாகத் தொடர்​புடைய தொகுதி மறு​வரையறையை எதிர்ப்​ப​தன் மூலம் திமுக​வும், காங்​கிரஸும் தாங்​கள் பெண்​களுக்கு எதி​ரான கட்​சிகள் என்​பதை மீண்​டும் ஒரு​முறை நிரூபித்​துள்ளன என்று தமிழக பாஜக தலைமை செய்​தித் தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி விமர்​சித்​துள்​ளார்.

இதுகுறித்து சென்னை கமலால​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ‘தொகுதி மறு​வரையறை என்ற பெயரில் தமிழகத்​தின் உரிமை​கள் பறிக்​கப்​படும். தென் மாநிலங்​களின் பலம் குறை​யும்’ என்று ஒரு பொய்​யான அச்​சத்தை முதல்​வர் ஸ்டா​லின் கடந்த சில நாட்​களாக விதைத்து வந்​தார்.

மத்​திய அரசின் நிலைப்​பாட்டை பிரதமர் மோடி மிகத் தெளி​வாக விளக்​கிய பிறகும், இந்த விவ​காரத்​தில் அரசி​யல் ஆதா​யம் தேடவே ஸ்டா​லின் முயற்​சிக்​கிறார்.

தமிழகத்​தில் திமுக ஆட்​சி​யின் ஊழல்​கள், சட்​டம் - ஒழுங்கு சீர்​கேடு, பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களை மறைக்க ‘மாநில உரிமை’ என்ற போர்​வை​யில் இத்​தகைய போலிப் பிரச்​சா​ரங்​களை அவர் செய்து வரு​கிறார்.

தற்​போது தமிழகத்​துக்​கான எம்​.பி. தொகு​தி​கள் 39-ல் இருந்து 59 ஆக உயரும் என்ற செய்தி வெளிவந்​துள்ள நிலை​யில், அதை வரவேற்க மனமின்றி திமுக - காங்​கிரஸ் கூட்​டணி எதிர்ப்பு தெரி​விப்​பது அவர்​களது இரட்டை வேடத்தை அம்​பலப்​படுத்​துகிறது.

2026-ம் ஆண்​டில் தொகுதி மறு​வரையறை செய்​வது என்​பது கடந்த 2001-ம் ஆண்​டிலேயே முடிவு செய்​யப்​பட்ட ஒன்​று. மேலும், தொகுதி மறு​வரையறை என்​பது மகளிருக்​கான 33 சதவீத இடஒதுக்​கீட்​டுடன் நேரடி​யாக தொடர்​புடையது. இதை எதிர்ப்​ப​தன் மூலம் திமுக​வும், காங்​கிரஸும் தாங்​கள் பெண்​களுக்கு எதி​ரான கட்​சிகள் என்​பதை மீண்​டும் ஒரு​முறை நிரூபித்​துள்​ளன.

மக்கள் பாடம் புகட்டுவர்

தன் குடும்​பத்​தைச் சேர்ந்த பெண்​களுக்​குக்​கூட அரசி​யலில் உரிய அங்​கீ​காரம் வழங்​காமல், வாரிசு அரசி​யலில் மகனுக்கு மட்​டுமே முக்​கி​யத்​து​வம் கொடுக்​கும் ஸ்டா​லின், பெண்​களின் முன்​னேற்​றத்​தைப் பற்​றிப் பேச தகு​தி​யற்​றவர்.

அவருக்கு துணிச்​சல் இருந்​தால் ‘மகளிர் இடஒதுக்​கீட்டை நாங்​கள் எதிர்க்​கிறோம்’ என்று நேரடி​யாக சொல்​லட்​டும். தமிழக மக்​கள் உரிய பாடம் புகட்​டு​வார்​கள்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT