கோவை மாவட்டம் வாளையாறு சோதனைச்சாவடியில் நேற்று கேரளாவில் இருந்து வந்த வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

 
தமிழகம்

பறவைக் காய்ச்சல் எதிரொலி: கோவையில் 12 சோதனைச்சாவடிகளில் 24 மணி நேர கண்காணிப்பு தீவிரம்

செய்திப்பிரிவு

கோவை: கேரளாவில் பறவைக் காய்ச்​சல் பர​வியுள்​ளதைத் தொடர்ந்து, தமிழக - கேரள எல்லை​யில் வாளை​யாறு உள்​ளிட்ட 12 சோதனைச் சாவடிகளில் கால்​நடைப் பராமரிப்​புத் துறை சார்​பில் 24 மணி நேர கண்​காணிப்​புப் பணி தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

கேரள மாநிலம் ஆலப்​புழா​வில் உள்ள கோழிப் பண்​ணைகளில் பறவைக் காய்ச்​சல் பாதிப்பு கண்​டறியப்​பட்​டதைத் தொடர்ந்து, தமிழக எல்லை​யோர மாவட்​டங்​களில் தடுப்பு நட​வடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. கோவை மாவட்​டத்​தில் ஆனைகட்டி, வாளை​யாறு, வேலந்​தாவளம், மேல்​பாவி, முள்ளி, மீனாட்​சிபுரம், கோபாலபுரம், செம்​மனாம்​பதி, வீரப்​பகவுண்​டன்​புதூர், நடுப்​புணி, ஜமீன்​காளியாபுரம், வடக்​காடு ஆகிய 12 சோதனைச் சாவடிகளில் கால்​நடைப் பராமரிப்​புத் துறை​யின் சிறப்​புக் குழு​வினர் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இது​குறித்து கோவை மண்​டல கால்​நடைப் பராமரிப்​புத் துறை இணை இயக்​குநர் சித்ரா தேவி கூறும்​போது, “கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாக​னங்​கள், தமிழகத்​தில் இருந்து கால்​நடைத் தீவனம் கொண்டு செல்​லும் வாக​னங்​கள் ஆகியவை முழு​மையாகச் சோதனை செய்​யப்​படு​கின்​றன. கிரு​மிநாசினி தெளித்த பிறகே வாக​னங்​கள் அனுமதிக்​கப்​படு​கின்​றன.

வாக​னங்​களின் வருகை, புறப்​படும் இடம், செல்​லும் இடம் உள்​ளிட்ட விவரங்​களும் சேகரிக்​கப்​படு​கின்​றன. மேலும், கோழிப் பண்​ணைகளுக்​கும் முன்​னெச்​சரிக்கை அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT