தமிழகம்

“தமிழக மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற விஜய்க்கு வாழ்த்துகள்” - ராகுல் காந்தி

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: 'ஒரு புதிய தலைமுறை, ஒரு புதிய குரல், ஒரு புதிய தோற்றத்தை தமிழ்நாடு தேர்ந்தெடுத்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற விஜய்க்கு என் நல்வாழ்த்துகள்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ ஒரு புதிய தலைமுறை, ஒரு புதிய குரல், ஒரு புதிய தோற்றத்தை தமிழ்நாடு தேர்ந்தெடுத்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற விஜய்க்கு என் நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இன்று நடந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அவர் விழா மேடையில் விஜய்யின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.

SCROLL FOR NEXT