உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

 
தமிழகம்

வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படை எஸ்ஐ-கள் பெற்ற பலன்களை வாபஸ் பெற கூடாது: ஐகோர்ட்

செய்திப்பிரிவு

மதுரை: சந்​தனக் கடத்​தல் வீரப்​பனை பிடிக்​கும் அதிரடிப்​படை​யில் பணிபுரிந்து பதவி உயர்​வு​பெற்ற உதவி காவல் ஆய்​வாளர்​களின் பலன்​களைத் திரும்ப பெறக்​கூ​டாது என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சந்​தனக் கடத்​தல் வீரப்​பன் 2004-ல் சிறப்பு அதிரடிப்​படையால் கொல்​லப்​பட்​டார். இதனால் அதிரடிப்​படை​யில் பல்​வேறு நிலைகளில் பணிபுரிந்த 900-க்​கும் மேற்​பட்​டோருக்கு ஒரு படிநிலை விரைவுப் பதவி உயர்வு வழங்​கப்​பட்​டது. இதன் அடிப்​படை​யில் 16 காவலர்​கள் எஸ்ஐகளாக பதவி உயர்வு பெற்​றனர்.

இவர்கள் பதவி உயர்வு பெற்று நேரத்​தில் தற்​காலிக அடிப்​படை​யில் பணிபுரிந்து வந்​ததால் 2009-ல் பதவி இறக்​கம் செய்யப்​பட்​டனர். இதை எதிர்த்து 16 பேரும் உயர் நீதி​மன்றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​களை தனி நீதிபதி தள்​ளு​படி செய்​தார். இதையடுத்து உயர் நீதி​மன்ற அமர் வில் மேல்​முறை​யீடு செய்தனர்.

இந்த மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. அரசுத் தரப்​பில், விரைவுப் பதவி உயர்வு என்​பது ஒரு படிக்கு மட்​டுமே என்​ப​தால், எந்த நிலை​யிலும் அது ஒரு தனி​நபருக்கு விரை​வான தொடர் பணிமூப்பை வழங்​காது. பதவி உயர்வு பெற்ற மேல்​முறை​யீட்​டாளர்​கள், பதவி உயர்வு வழங்​கப்​பட்ட நேரத்​தில் தற்​காலிக அடிப்​படையில் பணியாற்றி வந்​ததால் நாயக் பதவிக்​குத் தரம் குறைக்​கப்​பட்​டனர் என வாதிடப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள், மனு​தா​ரர்​களுக்கு 2004-ல் வெளி​யிடப்​பட்ட அரசாணை அடிப்​படை​யில் மாநில அரசால் தவறாக பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது. இருப்​பினும் சுற்​றுச்​சூழல் மற்​றும் வனவிலங்​கு​களுக்​குப் பெரும் சேதத்தை ஏற்​படுத்​திய சந்​தனக் கடத்​தல் வீரப்​பனைக் கொன்ற சிறப்பு அதிரடிப்​படை​யில் மனு​தா​ரர்​கள் தங்​கள் உயிரைப் பணயம் வைத்து அபாயகர​மான நடவடிக்​கை​களில் பங்​கேற்​றுள்​ளனர்.

இதனால் மனு​தா​ரர்​களுக்கு காவல்​துறை உதவி ஆய்​வாளர்​களாகப் பணி​யாற்​றிய காலத்​தில், பதவி உயர்வு பெற்ற நாளி​லிருந்து அவர்​கள் பெற்ற அனைத்​துப் பலன்​களை​யும் மாநில அரசு திரும்​பப் பெறக்​கூ​டாது என உத்​தர​விட்​டனர்.

SCROLL FOR NEXT