உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்

 
தமிழகம்

பார் கவுன்சில் தேர்தலில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் போட்டியிட தடை கோரி வழக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: குற்​றப்​பின்​னணி கொண்​ட​வர்​கள் தமிழ்​நாடு - புதுச்​சேரி பார் கவுன்​சில் தேர்​தலில் போட்​டி​யிட தடை விதிக்​கக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பாஜக வழக்​கறிஞ​ரான ஏற்​காடு ஏ.மோகன்​தாஸ் சார்​பில் வழக்​கறிஞர் ஜி.எஸ்​.மணி உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு: கடந்த 2018-ம் ஆண்டு நடை​பெற்ற தமிழ்​நாடு - புதுச்​சேரி பார் கவுன்​சில் தேர்​தலின்​போது குற்​றப்​பின்​னணி கொண்​ட​வர்​கள் போட்​டி​யிடக்​கூ​டாது என தடை விதித்​துஅப்​போதைய நீதிபதி என்​.கிரு​பாகரன் உத்​தர​விட் டிருந்​தார்.

இந்த உத்​தரவை எதிர்த்து பார் கவுன்​சில் உறுப்​பினர்​ சந்​திரமோகன் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து இடைக்​கால தடை​யுத்​தரவு பெற்​றார். அந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் தொடர்ந்து நிலு​வை​யில் உள்​ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடை​பெற்ற தமிழ்​நாடு - புதுச்​சேரி பார் கவுன்​சில் தேர்​தலில் போட்​டி​யிட்டு பதவி​யில் உள்ள பலர் குற்​றப்​பின்​னணி கொண்​ட​வர்​கள்.

கடந்த 2023 அகில இந்​திய பார் கவுன்​சில், 7 ஆண்​டுகளுக்கு மேல் தண்​டனை விதிக்​கக்​கூடிய குற்​றவழக்​கில் தொடர்​புடைய வழக்​கறிஞர்​கள் பார் கவுன்​சில் தேர்​தலில் போட்​டி​யிட தடை விதித்​தது. அதன்​பிறகு கடந்த 2025-ல் இரண்​டுக்​கும் மேற்​பட்ட வழக்​கு​களில் குற்​றம்​சாட்​டப்​பட்ட வழக்​கறிஞர்​கள் மட்​டும் போட்​டி​யிட முடி​யாத வகை​யில் சட்​டத்​திருத்​தம் கொண்டு வந்​துள்​ளது.

இதனை செல்​லாது என அறிவிக்க வேண்​டும். அத்​துடன் 7 ஆண்​டு​களுக்கு மேல் தண்​டனை விதிக்​கக்​கூடிய குற்​றவழக்​கு​களில் தொடர்​புடைய​வர்​கள் போட்​டி​யிட தடை விதிக்க வேண்​டும்.

பெண்​களுக்கு 30 சதவீத இடஒதுக்​கீட்டைப்​போல பழங்​குடி​யின மற்​றும் பட்​டியலின வழக்​கறிஞர்​களுக்​கும் உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்க உத்​தர​விட வேண்​டும்​. இவ்​வாறு கோரி​யுள்​ளார்​. இந்​த மனு விரை​வில்​ வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

SCROLL FOR NEXT