வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் அனுப்பிய தகவல்.

 
தமிழகம்

நகைக்கடன் வாங்கியோரிடம் கெடுபிடி காட்டும் வங்கிகள் - நடப்பது என்ன?

கே.சுரேஷ்

புதுக்கோட்டை: தங்​கத்​தின் விலை தொடர்ந்து குறைந்து வரு​வ​தால், நகைக் கடன் வித்​தி​யாசத்தை வசூலிக்க வங்கிகள் தீவிரம் காட்டி வரு​கின்​றன.

கடந்த சில ஆண்​டுகளாக தங்​கத்​தின் விலை உயர்ந்து கொண்டே இருந்​தது. இத​னால், வங்​கி​களில் நகைகள் அட​மானத்​துக்கு கணிச​மான தொகை கடனாக வாடிக்​கை​யாளர்​களுக்கு வழங்​கப்​பட்​டது.

ஆனால், கடந்த சில நாட்​களாக தங்​கத்​தின் விலை அதிரடி​யாகக் குறைந்து வரு​கிறது. இத​னால், ஒரு கிராமுக்கு வங்​கி​கள் வழங்​கிய கடன் தொகையைவிட தற்​போது தங்​கத்​தின் மதிப்பு குறைந்​து​விட்​டது.

எனவே, கொடுத்த கடன் தொகையைவிட மதிப்பு குறைவாக உள்ள நகைகளை அட​மானம் வைத்​துள்ள வாடிக்​கை​யாளர்​களை வங்​கி​கள் தொடர்பு கொண்டு வித்​தி​யாச தொகையைச் செலுத்​து​மாறும் அல்​லது கூடுதல் நகைகளை அட​மானம் வைக்​குமாறும் அறி​வுறுத்தி வரு​கின்​றன. உரிய காலத்​தில் இதை வாடிக்​கை​யாளர்​கள் செய்​யா

விட்​டால், வங்கி விதி​களின்​படி நட​வடிக்கை எடுக்​கப்​படும் சூழலும் உள்​ள​தால் நகைக் கடன் பெற்ற வாடிக்​கை​யாளர்​கள் கவலை அடைந்​துள்​ளனர். நகைக் கடன் பெற்​றுள்ள வாடிக்​கை​யாளர்​களை குறுஞ்​செய்​தி​கள் மற்​றும் செல்​போனிலும் வங்​கி​கள் தினமும் தொடர்பு கொள்​கின்​றன.

இது​குறித்து இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்​டச் செய​லா​ளர் த.செங்​கோடன் கூறியது: நகைகளை அடகு வைத்​தால் ஓராண்​டுக்​குள் அதற்​குரிய வட்​டியைச் செலுத்தி, நகைக் கடனைப் புதுப்​பித்​துக் கொள்ள வேண்​டும் என வங்கி நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

கடந்த ஆண்​டுகளில் நகை மதிப்பு கூடிக்​கொண்டே வந்​ததால், பலரும் வட்​டியைக்​கூட செலுத்​தாமல் அதையும் அசலுடன் சேர்த்து வந்​தனர். சிலர், ஏற்​கெனவே வைக்​கப்​பட்​டிருந்த நகை​யின் அன்​றைய மதிப்​புப்​படி கூடுதலாக கடன் பெற்​றனர்.

இந்​நிலை​யில், கொடுத்த கடனைவிட தங்​கத்​தின் விலை குறைந்​துள்​ள​தாகக் கூறி, ஓரிரு மாதங்​களுக்கு முன்பு அடகு வைத்​தவர்​களைக்​கூட வங்​கிக்கு வரவழைத்து, வித்​தி​யாச தொகையைச் செலுத்​து​மாறு வங்கி நிர்​வாகங்​கள் நிர்​பந்​தித்து வரு​கின்​றன. கால அவசாகம் தர மறுக்​கின்​றன.

இல்லை​யேல், நகையை ஏல நட​வடிக்​கைக்கு உட்​படுத்​து​வோம் எனவும் எச்​சரித்து வரு​கின்​றன. மழையின்றி சாகுபடி முற்றாக அழிந்​துள்ள நிலை​யில், புதிய பயிர்க் கடனும் தாராளமாக விவசாயிகளுக்​குக் கிடைக்​க​வில்லை.

இந்​தச் சூழலில் வங்கி நிர்​வாகங்​கள் இவ்​வாறு நிர்​பந்​தம் செய்​வதைத் தவிர்க்க வேண்​டும். இந்​தச் சிக்​கலில் இருந்து தப்​பிக்க மீட்​டர் வட்​டிக்கு கடன் வாங்க வேண்​டிய நிலைக்கு மக்​கள் தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

எனவே, இது​குறித்து உரிய நட​வடிக்கை எடுக்க மத்​திய அரசுக்கு தமிழக அரசு அழுத்​தம் கொடுக்க வேண்​டும். இல்லை​யேல் விவசாயிகள் மற்​றும் தொழிலா​ளர்​களைத் திரட்டி போராட்​டம் நடத்​தப்​படும் என்​றார்.

இது​குறித்து முன்​னோடி வங்கி அலு​வலக அலு​வலர்​கள் கூறியது: தங்​கத்​தின் விலை குறைவுக்கு ஏற்ப வாடிக்​கை​யாளர்​களிடம் இருந்து வித்​தி​யாச தொகையையோ அல்​லது கூடுதல் தங்​கத்​தையோ பெறுமாறு ரிசர்வ் வங்​கி​யிடம் இருந்து எந்த உத்​தரவும் வர​வில்லை.

எனினும், வங்கி நிர்​வாகங்​கள் இத்​தகைய நட​வடிக்​கை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றன. கடனை முழு​மையாக செலுத்​து​மாறும் நிர்​பந்​திக்​க​வில்லை என்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT