கோப்புப்படம்

 
தமிழகம்

மாணவர்கள் போராடத் தடை: சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது கல்லூரிக் கல்வி இயக்ககம்

செய்திப்பிரிவு

சென்னை: கல்​லூரிக் கல்வி ஆணை​யர் கடந்த 17-ம் தேதி தமிழகத்​தில் உள்ள அனைத்து அரசு கலை அறி​வியல் கல்லூரிகளின் முதல்​வர்​களுக்​கும் ஒரு சுற்​றறிக்கை அனுப்பினார்.

அதில், “கல்​லூரி மாணவர்​கள், அரசியல் கட்சிகள் நடத்​தும் போராட்​டங்​களில் பங்​கேற்​ப​தைத் தடுக்​கும் வகை​யில் பள்​ளிக் கல்​வி, உயர்​கல்​வி, காவல்​துறை மற்​றும் மாவட்ட நிர்​வாகம் ஆகிய துறை​களு​டன் ஒருங்​கிணைந்து நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்” என அறி​வுறுத்​தி​யிருந்​தார்.

கல்​லூரிக் கல்வி இயக்​ககத்​தின் இந்த நடவடிக்கை மாணவர்​களின் ஜனநாயக உரிமையை மறுக்​கும் செயல் என்று இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், பாமக தலை​வர் அன்​புமணி, திரா​விடர் கழக தலை​வர் கி.வீரமணி உள்​ளிட்ட அரசி​யல் கட்சி தலை​வர்​கள் கடும் கண்​டன​மும், எதிர்ப்​பும் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், கடந்த 17-ம் தேதி அனுப்​பப்​பட்ட சுற்​றறிக்கையை திரும்​பப் பெறு​வ​தாக கல்​லூரி கல்வி இயக்​ககம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக கல்​லூரிக் கல்வி ஆணை​யர் நேற்று (19-ம் தேதி) அனுப்பிய சுற்​றறிக்​கை​யில், “அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி மாணவ-​மாணவி​கள் போராட்​டம் மற்​றும் கிளர்ச்​சிகளில் பங்​கேற்​பதை தடை செய்ய நடவடிக்கை மேற்​கொள்ள கோரி கடந்த 17-ம் தேதி அனுப்​பப்​பட்ட சுற்​றறிக்கை திரும்​பப் பெறப்​படு​கிறது” எனக் கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT