தமிழகம்

சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் இனங்களை புதிதாக வளர்க்க தடை: மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்

மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநக​ராட்சி மாமன்​றக் கூட்​டம் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் தலை​மை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான நியமன மன்ற உறுப்​பினர்​களாக தேர்வு செய்​யப்​பட்ட பா.ஜான்சி உமா மற்​றும் பா.​பாலாஜி ஆகியோர்மாமன்ற உறுப்​பினர்​களாக பதவி​யேற்​றுக்​கொண்​டனர்.

தொடர்ந்​து, பாஜக கவுன்​சிலர் உமா ஆனந்த், அம்​பத்​தூர் மண்​டலத்​தில் 400 தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​கள் பெயரை விதி​களை மீறி பயன்​படுத்தி ரூ.1 கோடி வரை முறை​கேடு செய்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​காததைக் கண்​டித்து வெளிநடப்பு செய்​தார். அதனைத் தொடர்ந்​து, தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தில் மகாத்மா காந்​தி​யின் பெயரை நீக்​கியதை வன்​மை​யாக கண்​டிப்​ப​தாக காங்​கிரஸ் கவுன்​சிலர் எம்​.எஸ்​.​திர​வி​யம் பேசி​னார்.

ஒரே இடத்​தில் முழு நேர​மாக அல்​லது பகுதி நேர​மாக 25 சதுர அடிக்கு மேற்​பட்ட பரப்​பில் சாலை​யோரம் வியா​பாரம் செய்​வோர் மற்​றும் மோட்​டார் வாக​னத்​துடன் நடமாடும் வியா​பாரம் செய்​வோர் ஆகியோ​ருக்கு ஆண்​டுக்கு ரூ.3 ஆயிரம் (மாதம் ரூ.250), தள்ளு வண்டி வியா​பாரி​களுக்கு ஆண்​டுக்கு ரூ.1500, தலைச் சுமை​யாக கொண்டு செல்​லும் வியா​பாரி​களுக்கு ஆண்​டுக்கு ரூ.250 எனக் கட்​ட​ணம் நிர்​ண​யித்து வசூலிக்க அனு​மதி வழங்கப்பட்டுள்ளது.

மாநக​ராட்​சி​யில் பணிபுரி​யும் 29,455 தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு 200 வார்​டு​களி​லும் உடை மாற்​றும் அறை, கழிப்​பறை​களு​டன் கூடிய ஓய்​வறை​களை ரூ.29.70 கோடி​யில் அமைக்​க​ அனு​ம​தி​யளித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

பொது​மக்​களுக்கு அச்​சமூட்​டும் வகை​யில் ஆக்​ரோஷ​மான தன்மை கொண்ட வளர்ப்பு நாய் இனங்​களான பிட்புல், ராட்​வீலர் இனங்​களை சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குட்​பட்ட பகு​தி​களில் வளர்ப்​ப​தற்​குத் தடை விதிக்​க​வும், அவற்​றுக்கு செல்​லப்​பி​ராணி​களுக்​கான உரிமம் பெற விண்​ணப்​பிப்​ப​தற்​கும், உரிமத்தை புதுப்​பிப்​ப​தற்​கும் இன்று (டிச.20) முதல் தடை விதிக்​க​வும், இந்த நாய்​களை வீட்​டுக்கு வெளியே அழைத்​துச் செல்​லும்​போது அவற்​றுக்கு கழுத்​துப்​பட்​டை, வாய்க்​கவசம் அணி​விப்​பதை கட்​டாய​மாக்​க​வும், இதை பின்​பற்​றாத உரிமை​யாளர்​களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​க​வும், உரிமம் இன்றி சட்ட விரோத​மாக இந்த நாய்​களை புதி​தாக வாங்கி வளர்ப்​பவர்​களுக்கு ரூ.1 லட்​சம் அபராதம் விதிக்​க​வும் அனுமதி அளிக்கப்பட்டது.

உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி அரசு அலு​வல​ கங்​கள் உள்ளிட்ட பகு​தி​களில் சுற்​றித்​திரி​யும் தெரு நாய்​களை பிடித்​து, காப்​பகங்​களில் பராமரிக்​க​வும், அப்​பணி​களை மேற்​கொள்​ளும் தன்​னார்​வலர்​கள் மற்​றும் தொண்டு நிறு​வனங்​களுக்​கு, ஒரு நாய்க்கு நாளொன்​றுக்கு ரூ.50 பராமரிப்பு செல​வாக மாநக​ராட்சி தரு​வதற்​கும் மன்​றக் கூட்​டத்​தில் அனு​மதி அளித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. நேற்​றைய கூட்​டத்​தில் மொத்​தம் 110 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

SCROLL FOR NEXT