ஞாயிறு மற்றும் நாளை திங்கட்கிழமை ஆயுத பூஜை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று குவிந்த பயணிகள் கூட்டம்.

 
தமிழகம்

ஆயுத பூஜை, விஜயதசமி விழா களைகட்டியது: 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி பண்​டிகைகளை முன்​னிட்டு தமிழகம் முழு​வதும் பூஜை பொருட்​களை வாங்​கு​வதற்​காகத் திரண்ட பொது​மக்​களால் கடை வீதி​கள் மற்​றும் முக்​கிய சந்​தைகள் களை​கட்​டின. சென்​னை​யில் இருந்து சொந்த ஊருக்கு 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணம் செய்​தனர்.

தமிழகம் முழு​வதும் நாளை ஆயுத பூஜை கோலா​கல​மாகக் கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி தமிழகத்​தின் அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள முக்​கியச் சந்தை பகு​தி​கள், கடை வீதி​களில் பூஜை பொருட்​கள் வாங்​கு​வதற்​காகக் கடந்த 2 நாட்​களாக ஏராள​மான பொது​மக்​கள் திரண்டு வரு​கின்​றனர். சென்​னை​யில் கோயம்​பேடு, பாரி​முனை, தி.நகர், பெரம்​பூர், புரசை​வாக்​கம், வண்​ணாரப்​பேட்டை உள்​ளிட்ட முக்​கிய சந்தை பகு​தி​கள் காலை முதலே பரபரப்​பாகக் காணப்​பட்​டன.

குறிப்​பாக ஆயுத பூஜையை முன்​னிட்டு கோயம்​பேட்​டில் சிறப்​புச் சந்தை ஒரு வாரம் நடை​பெறுகிறது. இதில் பொரி, கடலை, வாழைப்​பழம், இலை, தேங்​காய், பழங்​கள் உள்​ளிட்ட பூஜை பொருட்​களை விற்​பனை செய்ய தனி​யாக ஓர் இடம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இங்​கும் அமோக​மாக விற்​பனை நடை​பெற்​றது.

அதே​நேரம் பொருட்​கள் மற்​றும் பூக்​களின் விலை வழக்​கத்​தை​விட அதி​கரித்து இருந்​தது. ஒரு கிலோ மல்லி ரூ.400-ல் இருந்து ரூ.1,500 வரை தரத்​துக்கு ஏற்ப விற்​பனை​யானது. அதே​போல் சம்​பங்கி ரூ.100-ல் இருந்து ரூ.250 வரை​யும், ஜாதி​மல்லி ரூ.400 வரை​யும், முல்லை ரூ.250 வரை​யும் விற்​பனை​யாகின.

ரோஜா ரூ.110-க்​கும், சம்​பங்கி ரூ.100-க்​கும் விற்​பனை​யானது. சில்​லறை வியா​பாரி​களும் கடைகளுக்​குத் தேவை​யான பொருட்​களை வாங்​கிச் சென்​றனர். இதே​போல் வாட்​டர் வாஷ் செய்​வதற்​கும், மெக்​கானிக் ஷாப்​களில் ஏராள​மான வாக​னங்​கள் குவிந்த வண்​ணம் இருந்​தன. சுண்​டல் உள்​ளிட்ட பதார்த்​தங்​களைச் செய்​வதற்​கான பொருட்​களை வாங்க மளிகை கடைகளி​லும் கூட்​டம் குவிந்​தது.

குறிப்​பாக மாலை நேரங்​களில் இறுதி நேர வியா​பாரம் களை​கட்​டியது. இவ்​வாறு பொருட்​களை வாங்​கிச் செல்ல ஏராள​மான வியா​பாரி​கள் மற்​றும் பொது​மக்​கள் வந்த நிலை​யில், அலு​வல​கம் முடிந்து வீடு செல்​வோர், பண்​டிகைக்கு ஊர்​களுக்கு செல்​வோர் என அணிவகுத்​த​தால் முக்​கிய சாலைகளி​லும், புறநகர் பிர​தான சாலைகளி​லும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

போக்​கு​வரத்து காவலர்​கள் கூடு​தலாக பணி​யமர்த்​தப்​பட்​டு, நெரிசலை சீர் செய்​தனர். கிளாம்​பாக்​கம், கோயம்​பேடு, மாதவரம், மறைமலை நகர், சிஎம்​டிஏ காலநிலைப் பூங்கா உள்​ளிட்ட பேருந்து நிலை​யங்​களுக்கு வந்​தவர்​களுக்​காகப் போக்​கு​வரத்து கழகம் சார்​பில் சிறப்பு பேருந்​துகளுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. வாரத்​தின் தொடக்​கத்​தில் ஆயுத​பூஜை வந்த போதும், அதைத் தொடர்ந்து விஜயதசமி என தொடர் விடு​முறை இருப்​ப​தால் பலரும் ஊர்​களுக்கு பயணிக்க திட்​ட​மிட்​டனர். இதனால் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

அதன்​படி, கடந்த 15, 16, 17 ஆகிய 3 நாட்​களில் வழக்​க​மான பேருந்​துகளு​டன், சிறப்​புப் பேருந்​துகளும் சேர்த்து மொத்​தம் 10,277 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன. அதன்​மூலம் ரூ.4.25 லட்​சம் பேர் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றுள்​ளனர். முன்​ப​திவு செய்​தவர்​கள் சம்​பந்​தப்​பட்ட பேருந்​தி​லும், அண்டை மாவட்​டங்​களில் வசிப்​போர் மற்​றும் முன்​ப​திவு செய்​யாமல் வந்​தவர்​கள் பேருந்​துக்​காகக் காத்​திருந்து பயணித்​தனர்.

ஆம்னி பேருந்​துகளி​லும் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் சொந்த ஊர்​களுக்​குப் புறப்​பட்​டனர். இதற்கிடையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால், பேருந்து, ரயில் நிலையங்களுக்குச் செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டனர். மேலும், டோல்கேட்களில் வாகனங்கள் அதிகரித்ததால் தாமதம் ஏற்பட்டது.

இதற்​கிடையே பண்​டிகைக் காலத்​தில் ஆம்னி பேருந்​துகளில் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​வ​தாக எழுந்த புகார்​களைத் தொடர்ந்​து, போக்​கு​வரத்​து அதி​காரி​கள் தமிழகம் முழு​வதும் வாக​னத் தணிக்​கை​யில் ஈடு​பட்​டனர். இது​வரை 1,222 ஆம்னி பேருந்​துகளில் சோதனை நடத்​தப்​பட்டு விதி​மீறலில் ஈடு​பட்ட 207 பேருந்​துகளுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டது.

அதே​போல் ஆயுத​பூஜை, விஜயதசமியை முன்​னிட்டு ரயில்​களில் சொந்த ஊர்​களுக்​குச் செல்​வதற்​காக ஏராள​மானோர் முன்​ப​திவு செய்​திருந்​தனர். சென்​னை​யில் இருந்து கன்​னி​யாகுமரி, போத்​தனூர், தாம்​பரத்​தில் இருந்து செங்​கோட்டை உள்​ளிட்ட பல்​வேறு நகரங்​களுக்​குச் சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​பட்​டிருந்​தன. இதன்​காரண​மாக, சென்னை எழும்​பூர், சென்ட்​ரல், தாம்​பரம் உள்​ளிட்ட ரயில் நிலை​யங்​களில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. ரயில்​களின் முன்​ப​தி​வில்​லாத பெட்​டிகளில் கட்​டுக்​கடங்​காத கூட்​டம் நிரம்பி வழிந்​தது. அந்த வகை​யில் சென்​னை​யில் இருந்து புறப்​பட்ட ரயில்​களில் கடந்த 3 நாட்​களில் மட்​டும் 4 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணம் மேற்​கொண்​டனர்.

இதுத​விர கார், வேன் போன்ற சொந்த வாக​னங்​களி​லும் ஏராள​மானோர் விடு​முறையை கொண்​டாட உற்​சாக​மாகப் பயணத்தை மேற்​கொண்​டனர். சனி, ஞாயிறு விடு​முறை மற்​றும் திங்​கட்​கிழமை ஆயுத பூஜை என தொடர்ந்து விடு​முறை வந்​த​தால் சுமார் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் சொந்த ஊர்​களுக்கு புறப்​பட்​டனர்​. பேருந்​து, ரயில்​களில் டிக்​கெட் இல்​லாத​தால் பலர் விமானங்​களில் பயணித்து வரு​கின்​றனர். இதனால் சென்னை விமான நிலை​யத்​தில் கூட்​டம் அதி​கரித்​துள்​ளது. அதற்​கேற்ப சென்​னை​யில் இருந்து திருச்​சி, மதுரை, தூத்​துக்​குடி, கோவை, சேலம் மற்​றும் கேரளா, ஆந்​தி​ரா, கர்​நாடகா செல்​லும் விமானங்​களில் கட்​ட​ணங்​கள் அதி​கரிக்​கப்​பட்டு இருந்​தன.

இதன் காரண​மாக கோயம்​பேடு, எழும்​பூர், சென்ட்​ரல், விமான நிலை​யம், போரூர், பூந்​தமல்லி உள்​ளிட்ட இடங்​களுக்​குச் சென்று அங்​கிருந்து பேருந்​து, ரயில், விமானம் மூலம் சொந்த ஊர்​களுக்​குச் செல்ல மெட்ரோ ரயில் நிலை​யத்​தி​லும் கூட்​டம் அலைமோ​தி​யது. பொது​வாக சென்னை மெட்ரோ ரயி​லில் நாள்​தோறும் 3 லட்​சம் பேரும், வடபழனி - பூந்​தமல்லி வழிதடத்​தில் 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோரும் பயணிக்​கும் நிலை​யில், நேற்று முன்​தின​மும், நேற்​றும் மெட்ரோ ரயில்​களில் கூட்​டம் நிரம்​பி வழிந்​தது. வெளியூர் சென்றவர்கள்​ திரும்​பி சென்​னை வரு​வதற்​கும்​ கூடு​தல்​ பேருந்​துகள்​ இயக்​க நடவடிக்​கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT