தமிழகம்

மீட்டர் கட்டணம் உயர்வு கோரி ஆட்டோ தொழிலாளர்கள் செப்.26-ல் கோட்டை நோக்கி பேரணி

செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து ஆட்டோ தொழிற்​சங்க கூட்​டமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர் எஸ்​.​பாலசுப்​பிரமணி​யன் நேற்று சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 14 ஆண்​டு​களாக ஆட்டோ மீட்​டர் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட​வில்​லை.

தவெக அரசு பொறுப்​பேற்ற பிறகு கடந்த ஜூலை 9-ம் தேதி தொழிற்​சங்க பிர​தி​நி​தி​கள், பொது​மக்​கள், அதி​காரி​களு​டன் போக்​கு​வரத்து துறை அமைச்​சர் முத்​தரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

அந்த கூட்​டத்​தில் முதல் 1.5 கி.மீ.க்கு ரூ.60-ம், அடுத்த ஒரு கி.மீ.க்கு ரூ.30-ம், காத்​திருப்பு கட்​ட​ணம் நிமிடத்​துக்கு ஒரு ரூபா​யும், இரவுக் கட்​ட​ணம் ஒன்​றரை மடங்கு என்​றும் அனைத்து தொழிற்​சங்​கங்​களும் ஒரு​மன​தாக சொன்​னோம்.

இதை கூட்​டத்​தில் பங்​கேற்ற பொது​மக்​களும் ஒப்​புக்​கொண்​டனர். போக்​கு​வரத்து துறை மானிய கோரிக்​கை​யில் அறி​விப்பு வெளி​யாகும் என எதிர்​பார்த்த நிலை​யில் மீண்​டும் புதி​தாக குழு அமைத்​திருப்​ப​தாக கடந்த 27-ம் தேதி தெரி​வித்​தனர். இது எங்​களுக்கு பெருத்த ஏமாற்​றத்தை அளித்​தது.

மீட்​டர் கட்டண உயர்வு உள்​ளிட்ட ஆட்டோ தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகளை வலி​யுறுத்தி வரும் 26-ம் தேதி கோட்டை நோக்கி பேரணி செல்ல உள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT