தமிழகம்

எரிபொருள் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: எரிபொருள், காஸ் தட்​டுப்​பாட்டை தீர்க்க வலி​யுறுத்தி ஆட்டோ ஓட்​டுநர்​கள் போராட்​டத்​தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்​றும் ஈரானுக்கு இடையே நடை​பெறும் போரின் காரண​மாக ஏற்​பட்​டுள்ள எரிபொருள், காஸ் தட்​டுப்​பாட்டை தீர்க்க வேண்​டும்.

தட்​டுப்​பாட்டை காரணம் காட்டி எரிபொருள் விலையை ஏற்றி விற்​கும் நிறு​வனங்​கள் மீது தமிழக அரசு மற்​றும் மத்​திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என வலி​யுறுத்தி ஆட்டோ ஓட்​டுநர்​கள் நல சங்​கத்​தின் சார்​பில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம் அண்ணா சாலை தாராப்​பூர் டவர்ஸ் அருகே நேற்று நடை​பெற்​றது.

          

இந்​தப் போராட்​டத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட ஆட்டோ ஓட்​டுநர்​கள் மற்​றும் சிஐடியு உறுப்​பினர்​கள் கலந்து கொண்​டனர்.ஆட்டோ ஓட்​டுநர்​கள் நலச் சங்​கத்​தின் மாநில செயல் தலை​வர் பாலசுப்​பிரமணி​யம் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சென்​னை​யில் 25 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்க முடிய​வில்​லை.

இன்​றைக்​கும் அந்த எண்​ணிக்கை கூடும், எரிபொருள் தட்​டுப்​பாட்டால் தனியார் டாக்சி சேவை நிறு​வனங்​கள் கட்​ட​ணங்​களை உயர்த்​தி​யுள்​ளன. இதனை மத்​திய, மாநில அரசுகள் சீர் செய்ய வேண்​டும்.

எரிபொருள் ஆட்டோ ஓட்​டுநர்​களுக்கு மட்​டும் சம்​பந்​தப்​பட்​டது கிடை​யாது. விளிம்பு நிலை​யில் இருக்​கும் மக்​களுக்கு ஆட்டோக்கள்தான் ஆம்​புலன்​ஸ். எனவே தமிழக அரசு தகுந்த நடவடிக்​கைகளை எடுக்​கும் என்ற நம்​பிக்கை உள்​ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT