தமிழக பாஜக இளைஞரணி தலை​வர் எஸ்​.ஜி.சூர்யா

 
தமிழகம்

“அரசியல் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப்பதிவு” - எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தாக்குதல் சம்பவம்

செய்திப்பிரிவு

சென்னை: தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் நடை​பெற்ற தாக்​குதல் சம்​பவத்​தில் பாதிக்​கப்​பட்ட நபர்​கள் மீதே வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக தமிழக பாஜக இளைஞரணி தலை​வர் எஸ்​.ஜி.சூர்யா தெரி​வித்​தார்.

தனி​யார் தொலைக்​காட்சி அலு​வல​கத்​தில் கடந்த ஜனவரி 9-ம் தேதி நடை​பெற்ற தாக்​குதல் சம்​பவம் குறித்து பாஜக இளைஞரணி தலை​வர் எஸ்​.ஜி.சூர்​யா, சென்​னை​யில் நிருபர்​களிடம் நேற்று விளக்​கம் அளித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: திமுக ஆட்​சி​யில் சட்​டம் ஒழுங்கு பிரச்​னை​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கின்​றன. கடந்த 2 நாட்​களுக்கு முன் நடை​பெற்ற தனி​யார் தொலைக்​காட்சி விவாதத்​தில் கலந்​து​கொண்ட ஊடக​விய​லா​ளர் ஒரு​வர் 2025-ம் ஆண்டு பொங்​கலின்​போது திமுக ரூ.1000 வழங்​கியது என்ற தவறான தகவலை சொன்​னார்.

அந்த அரங்​கத்​தில் இருந்த தவெக, பாஜக, நாம் தமி​ழர் ஆகிய கட்​சி​களின் தொண்​டர்​கள் ஊடக​விய​லா​ளர் கருத்தை எதிர்த்​தனர். உடனே அதற்கு அவர் கோபப்​பட்டு மேடை​யிலேயே அவதூறான வார்த்​தையை பேசி​விட்டு அந்த நிகழ்ச்​சியை புறக்​கணிக்​கிறேன் என்று கூறி​விட்டு வெளியே சென்​றார். அதன்​பின் தனக்கு வேண்​டிய​வர்​களை வரவழைத்து நிகழ்ச்சி முடி​யும் வரை அங்கே காத்​திருந்து வெளியே வந்​தவுடன் பிரச்சினை செய்​யும் முனைப்​பில் அவர் இருந்​தார்.

நிகழ்ச்சி முடிந்த பின்​னரே எங்​களுக்கு இந்த சம்​பவம் தெரிந்​தது. வெளியே இருந்​தவர்​களும் நாங்​கள் திமுக​வின் படை, அவர்​களை பார்த்​துக் கொள்​கி​றோம் என்று கூச்​சலிட்டு கொண்​டிருந்​தனர். உடனே உள்ளே இருந்த திமுக எம்பி தங்க தமிழ்ச்​செல்​வனிடம், அவர்​களை சமா​தானப்​படுத்​துங்​கள் என தொலைக்​காட்சி நிர்​வாகம் கூறியது. அவர் வெளியே சென்று 15 நிமிடங்​கள் அவர்​களிடம் பேசி​விட்டு உள்ளே வந்​தார். நான் கூறி​னால் அவர்​கள் கேட்​க​வில்​லை, நீங்​கள் வேண்​டு​மா​னால் பேசிக் கொள்​ளுங்​கள் என்​றார்.

இதையடுத்து அவர்​களிடம் பேசுவதற்​காக நான் இளைஞரணி சகோ​தரர்​களு​டன் சென்​றேன். பேச்சு ஆரம்​பித்​ததும் அவர்​கள் பாட்​டில் உள்​ளிட்ட ஆயுதங்​களை எடுத்​துக்​கொண்டு எங்​களை தாக்​கு​வதற்கு முனைந்​தனர். இவை அனைத்​தும் அந்த தொலைக்​காட்சி வளாக சிசிடி​வி​யில் பதி​வாகி​யுள்​ளது. காவல் துறை​யினர் என்னை பாது​காப்​பாக அரு​கில் இருந்து கேட்​டுக்​குள் அடைத்​தனர். மேலும், அங்கே மின்​சா​ரம் துண்​டிக்​கப்​பட்டு பாஜக இளைஞர்​கள் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

அதன்​பின் காவல் துறை​யினர் பாதிக்​கப்​பட்ட எங்​களிடம் புகார் பெற்​றுக் கொள்​கி​றார்​கள். இதில் தவறு இழைத்​தது எதிர் தரப்​பினர்​தான். ஆனால், திடீரென அந்த நிகழ்ச்​சிக்கு வராத ஒரு பெண்​ணிடம் புகார் மனு வாங்​கப்​படு​கிறது. அதி​லுள்ள தகவல்​கள் முரணான​வை. எங்​களை காவல்​துறை​யினர் பத்​திர​மாக மீட்​பது, காப்​பாற்ற முடி​யாதவர்​களை திமுக​வினர் அடிப்​பது அனைத்​துமே சிசிடிவி காட்​சிகள் ஆதா​ரத்​துடன் உள்​ளன. இதன் பின்​னணி​யில் திமுக இருக்​கிறது. ஆட்சி அதி​காரத்தை கொண்டு எது​வும் செய்​ய​லாம் என்று நினைப்​பது இந்த ஜனநாயக நாட்​டில் அச்​சத்தை ஏற்​படுத்​துகிறது.

அதே​போல், தமிழக காவல்​துறை சிறப்​பாக செயல்​பட்​டாலும்​கூட திமுக அழுத்​தத்​தால் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நண்​பர்​களை பாது​காப்​ப​தற்​கான வேலை​களை செய்​து​வ​ரு​கிறது. நாங்​கள் கொடுத்த புகாரின் மீது எப்​ஐஆர் பதிவு செய்​ய​வில்​லை. எங்​களுக்கு நியா​யம் கிடைக்​க​வில்லை எனில் நாங்​கள் போராட்​டம் நடத்​து​வோம், நீதி​மன்​றம் செல்​வோம். அரு​கில் உள்ள ஆணை​யர் அலு​வல​கத்​தில் இருந்து 5 நிமிடத்​தில் வரவேண்​டிய காவல்​துறை ஒரு மணி நேரம் கழித்து வந்​தது, திட்​ட​மிட்டு தாமதம் செய்​ததா என்ற சந்​தேகம் எழுகிறது.

காவல்​துறையை அனுப்​ப​வி​டா​மல் செய்த அரசி​யல் பின்​னணி குறித்த கேள்​வி​யும் எழுகிறது. தற்​போது பல்​வேறு பிரி​வு​களின் கீழ் 7 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது. அதி​லும் ஒரு​வரை எந்த தகவலும் இல்​லாமல் இரவோடு, இரவாக காவல்​துறைர் கைது செய்​துள்​ளது. ஆளும்​கட்​சி​யினர் அதி​காரத்​துக்​கும், தங்​கள் சுயல​பாத்​துக்​கும் காவல்​துறையை பயன்​படுத்​து​வது நியா​மானதல்ல. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT