முதல்வர் விஜய்

 
தமிழகம்

‘சொத்து விவரம் எதையும் மறைக்கவில்லை’ - முதல்வர் விஜய் தரப்பு வாதம்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பெரம்பூர் தொகுதியில் தனது வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சென்னை பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன், திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நடைபெற்று வருகிறது.

முதல்வர் விஜய் தரப்பில் இரண்டாவது நாளாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதல்வர் விஜய் தரப்பில், பெரம்பூர் தொகுதி வேட்பு மனுவில் ரூ.600 கோடிக்கு மேல் எனக்கும், மனைவிக்கும் சொந்தமான சொத்துகளின் விவரங்கள், வருமான வரி கணக்கு விவரங்கள் என எல்லா விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த தகவலையும் மறைக்கவில்லை. அனைத்து விவரங்களையும் 99 சதவீதம் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளேன். ஒரு சில தவறுகள் இருக்கலாம் தான். அதற்காக வேட்புமனுவை ஏற்றது தவறு என சொல்ல முடியாது. வேட்புமனுவை ஏற்றது சரிதான்.

இதன் அடிப்படையில், வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லாமல், எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும்’ என முதல்வர் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்த மனுதாரர்கள் தரப்பு வாதங்களுக்காக, விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT