விஜய் | மோடி 
தமிழகம்

தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து | தேர்தல் முடிவுகள் 2026

வெற்றி மயிலோன்

புது டெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய தவெகவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றிகள். மக்களின் பிரச்சினைகளைக் களைவதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.

சிறப்பான தேர்தல் செயல்பாட்டை வெளிப்படுத்திய தவெகவுக்கு எங்களது வாழ்த்துகள். தமிழகத்தின் முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு தனது அனைத்து முயற்சிகளையும் முழுமையாக மேற்கொள்ளும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தவெக 106 தொகுதிகளையும், திமுக கூட்டணி 74 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி 54 தொகுதிகளையும் வசப்படுத்தும் நிலையில் உள்ளன.

SCROLL FOR NEXT