அஸ்ரா கார்க் 
தமிழகம்

தமிழக உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழகத்தின் உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மண்டல ஐ.ஜியாக உள்ள அஸ்ரா கார்க், தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது உளவுத் துறை ஐ.ஜி.யாக இருந்த செந்தில்வேலன் மாற்றப்பட்டு, அவினாஷ் குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்தச் சூழலில், தற்போது அஸ்ரா கார்க் உளவுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், அந்த வழக்கை விசாரிக்க அப்போதைய திமுக அரசு அஸ்ரா கார்க்கை நியமித்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT