தமிழகம்

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு பின்னடைவு ஏன்? - முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதில்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல முக்​கிய ரயில்வே திட்​டங்​கள் பின்​னடைவை சந்​திக்​கிறதே தவிர, நிதி பற்​றாக்குறை​யால் திட்​டங்​கள் தடைபடவில்லை என்று முதல்​வர் ஸ்டாலின் குற்​றச்​சாட்டுக்கு ரயில்வே துறை அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்​தார்.

தமிழக ரயில்வே திட்​டங்​களுக்​குத் தேவை​யான நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்டா​லின் நேற்று முன்​தினம் கடிதம் எழு​தி​யிருந்​தார். அதில், ‘94 சதவீத நிலங்​களைக் கையகப்​படுத்​தும் பணி முடிக்​கப்​பட்​டு, ரயில்வே துறை​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. 931 ஹெக்​டேர் நிலம் எடுக்க ரயில்வே துறை நிதி ஒதுக்​க​வில்​லை’ என்று கூறியிருந்​தார்.

          

இந்​நிலை​யில், இதற்கு பதில் அளித்து எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: தமிழகத்​தின் வளர்ச்​சிக்​காக மத்​திய அரசு முழு அர்ப்​பணிப்​புடன் செயல்​படு​கிறது. 2026–27-ம் நிதி ஆண்​டில் தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், மாநில அரசின் ஒத்​துழைப்​பின்றிரயில்வே உள்​கட்​டமைப்பு மேம்​பாட்டை செயல்​படுத்த முடி​யாது.

செயல்​பாட்​டில் உள்ள ரயில்வே திட்​டங்​களுக்கு தேவை​யான நிலத்​தில் 24 சதவீதம் மட்​டுமே இது​வரை ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. அதாவது 4,326 ஹெக்​டேரில் 1,052 ஹெக்​டேர் நிலம் மட்​டும் கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. நிலம் கையகப்​படுத்த, தமிழக அரசுக்கு ஏற்​கெனவே ரூ.1,465 கோடி செலுத்​தப்​பட்​டுள்​ளது.

நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால்​தான் பல முக்​கிய ரயில்வே திட்​டங்​கள் பின்​னடைவை சந்​திக்​கிறதே தவிர, நிதி பற்​றாக்​குறை​யால் திட்​டங்​கள் தடைபட​வில்​லை. இதற்கு மாறாக கூறப்​படும் எந்த குற்​றச்​சாட்​டும் ஆதா​ரமற்​றது. மதுரை - தூத்​துக்​குடி (வழி: அருப்​புக்​கோட்​டை) புதிய பாதை திட்​டத்​துக்கு 91 சதவீத நில​மும், திண்​டிவனம் - செஞ்சி - திரு​வண்​ணா​மலை புதிய பாதை திட்​டத்​துக்கு 86 சதவீதம் நில​மும் கையகப்​படுத்​தாமல் இன்​னும் நிலு​வை​யில் உள்​ளது.

ராமேசுவரம் - தனுஷ்கோடி புதிய பாதை திட்​டத்​துக்கு பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு அடிக்​கல் நாட்​டி​னார். மாநில அரசின் ஒத்​துழைப்பு இல்​லாத​தால், 6 ஆண்​டு​கள் ஆகி​யும், இத்​திட்​டத்​துக்கு நிலம் கையகப்​படுத்​துதல் இன்​னும் தொடங்​கப்​பட​வில்​லை.

ஆனாலும்​கூட, தமிழகத்​தில் பல புதிய ரயில் பாதைகள், இரட்​டைப் பாதைகள், 3, 4-வது பாதை திட்​டங்​கள் மத்​திய அரசால் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளன. மாநிலத்​தின் பொருளா​தார, தொழில்துறை வளர்ச்​சியை ஆதரிக்க கூடு​தல் திறன் விரி​வாக்​கத்​துக்​காக விரி​வான திட்ட அறிக்​கைகளும் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன. கடந்த 2014 முதல், தமிழகத்​தில் சுமார் 1,350 கி.மீ. புதிய ரயில் பாதைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. 2,386 கி.மீ. ரயில் பாதைகள் மின்​ம​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளன. இது 97 சதவீதம் ஆகும்.

தமிழகத்​தில் ரயில்வே உள்​கட்​டமைப்பு மேம்​பாட்டை வேகப்​படுத்த மத்​திய அரசு தயா​ராக, உறு​தி​யாக உள்​ளது. ஆனால், இத்​திட்​டங்​களை மக்​களிடம் விரை​வாக சேர்க்க மாநில அரசு உரிய நேரத்​தில் ஆதர​வும்​, ஒத்​துழைப்​பும்​ அளிப்​பது மிக அவசி​யம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT