அருண் ஐபிஎஸ்

 
தமிழகம்

அருண் ஐபிஎஸ் உட்பட 3 அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தமிழக அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அருண் ஐபிஎஸ் உட்பட 3 காவல் துறை அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போலீஸ் அகாடமி இயக்குநராக உள்ள அருண் ஐபிஎஸ் மற்றும் கோவை மாநகர ஆணையராக உள்ள கண்ணன் ஐபிஎஸ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

டிஜிபி ராஜீவ் குமார் ஐபிஎஸ், கூடுதல் பொறுப்பாக போலீஸ் அகாடமி இயக்குநர் பணியை கவனிப்பார். இதேபோல கோவை மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி ஐபிஎஸ், கோவை மாநகர ஆணையர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஸ்மினும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

‘ஜெம்’ வீரமணி மீதான போக்சோ வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் கவனம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT