தமிழகம்

சூரசம்ஹார விழாவின்போது முதல்வர் விஜய்க்கு அரோகரா முழக்கம்: தலைவர்கள் கண்டனம்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: திருச்​செந்​தூர் சூரசம்​ஹார விழா​வின்​போது முதல்​வர் மற்​றும் அமைச்​சரை போற்றி அரோகரா முழக்​கமிட்ட வர்​ணனையாளர்​களின் செயலுக்கு அரசி​யல் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகாரும் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற சூரசம்​ஹார விழா​வின்​போது நிகழ்ச்​சியை வர்​ணனை செய்த தமிழ்​நாடு இயல் இசை நாடக மன்​றத் தலை​வர் புஷ்பவனம் குப்​புசாமி, அறங்​காவலர் தேர்​வுக்​குழு உறுப்​பினரும் பாடகரு​மான வேல்​முருகன் ஆகியோர் முருகப்​பெரு​மானுடன் தமிழக முதல்​வர், இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ஆகியோ​ருக்​கும் அரோகரா என முழக்​கமிட்​டனர். அவர்​களின் செயலுக்கு அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக பாஜக தலை​வர் நயினார் நாகேந்​திரன்: கந்​தனின் திருப்​பு​கழ் ஓங்கி ஒலிக்க வேண்​டிய திருச்​செந்​தூர் திருத்​தலத்​தில், கண்​ட​வர்​களுக்​கெல்​லாம் ‘அரோகரா’ முழக்​கமிடும் துணிச்​சல் இவர்​களுக்கு எங்​கிருந்து வந்​தது, எவ்​வித ஆன்​மிகப் புரிதலோ அல்​லது பற்​றுதலோ இல்​லாத ஒரு சினிமா பிரபலத்தை, இந்து சமய அறநிலை​யத் துறை​யின் அறங்​காவலர் தேர்​வுக் குழு உறுப்​பின​ராக நியமித்​தால், அதன் விளைவு​கள் இப்​படித்​தான் இருக்​கும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தமிழ்க் கட​வுளான முருகப்​பெரு​மானை அவ​மதிக்​கும் வித​மாக, கட​வுளுக்கு இணை​யாக முதலமைச்​சரை​யும் அறநிலை​யத் துறை அமைச்​சரை​யும் துதி பாடிய வர்​ணனையாளர்​கள் – உணர்வு​பூர்​வ​மான இந்​நிகழ்​வில் பக்​தர்​களின் மனதை புண்​படுத்​திய வர்​ணனையாளர்​கள் மீது கடும் நட​வடிக்கை எடுக்க வேண்​டும்

திமுக சமூகவலைத்​தள பதிவு: முருகன் கோயில் சூரசம்​ஹார நிகழ்வை முதல்​வருக்​கும் அமைச்​சருக்​கும் அரோகாரா கோஷம் போடப் பயன்​படுத்​தி​யது இது​வரை தமிழகம் கண்​டிராத மலிவான அரசி​யல். முதல்​வர் விஜய் இந்​தத் தவறுக்​குப் பொறுப்​பேற்று மன்​னிப்​புக் கேட்க வேண்​டும்.

வீ த லீடர்ஸ் அமைப்​பின் தலை​வர் அண்​ணா​மலை: சூரசம்​ஹார விழா​வின்​போது, அறநிலை​யத் துறை உறுப்​பினர் வேல்​முருகன், முதல்​வர் விஜய், அமைச்​சர் ரமேஷ்க்கு அரோகரா என முழக்​கமிட்​டது கண்​டனத்​துக்​குரியது. அனைத்து மதத்​தினருக்​கும் சமமான உரிமை வழங்க வேண்​டும். இதற்கு முதல்​வர் கண்​டனம் தெரி​விப்​ப​துடன், அறநிலை​யத்​துறையும் உரிய நட​வடிக்கை எடுக்க வேண்​டும்.

இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்வரா சி. சுப்​பிரமணி​யம்: ஆன்​மிக நிகழ்​வில், முருகப்​பெரு​மானுக்கு உரிய பக்தி முழக்​கத்தை அரசி​யல் தலை​வர்​களின் புகழ்​பாடுவதற்​குப் பயன்​படுத்​து​வது எந்த வகை​யிலும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது. பதவி வழங்​கியதற்​காக கட​வுளோடு ஒப்​பிடுவது மிகவும் கண்​டனத்​திற்​குரியது.

பாரத இந்து முன்​னணி​யின் மாநிலத் தலை​வர் ஆர்.டி.பிரபு: சூரசம்​ஹார நிகழ்ச்​சி​யின் போது முதல்​வர் மற்​றும் அமைச்​சரை புகழ்ந்து பாடி​யிருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது மேலும், “கந்​தனுக்கு அரோகரா” என பக்​தர்​கள் முழக்​கமிடும் இடத்​தில், “முதல்​வருக்கு அரோகரா”, “அமைச்​சருக்கு அரோகரா’” எனப் பாடி​யிருப்​பது ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது.

போலீ​ஸில் புகார்: இதற்​கிடையே, இந்த விவகாரத்​தில் பாடகர்​கள் வேல்​முருகன், புஷ்பவனம் குப்​புசாமி ஆகியோர் மீது நட​வடிக்கை எடுக்​கக் கோரி பாரத் இந்து முன்​னணி சார்​பில் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று புகார் அளிக்​கப்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT