தமிழகம்

அங்கீகரிக்கப்பட்ட ஓஆர்எஸ் கரைசல் மட்டுமே நீர்ச்சத்து இழப்பை தடுக்கும்: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

'உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓஆர்எஸ் கரைசல் மட்டுமே உடலில் நீர்ச் சத்து இழப்பை தடுக்கும்' என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வயிற்றுப் போக்கு, நீர்ச்சத்து இழப்பு பிரச்சினைக்கான சிகிச்சைக்கு உப்பு - சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக வியர்வை வெளியேறுதல், வயிற்றுப் போக்கு சமயத்தில் உடலில் இருந்து குளுக்கோஸ் மற்றும் அத்தியாவசிய உப்புகள் குறை கிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் உள் உறுப்புகள் பாதிப்பும், உயிரிழப் பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

          

நீரில் கலந்து பருக வேண்டும்: உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உப்பு - சர்க் கரை கரைசலை பயன்படுத்து வதன் மூலம் உடலில் நீர்ச் சத்து இழப்பை தடுக்க முடியும். 20.5 கிராம் எடையுள்ள உப்பு-சர்க்கரை கரைசல் பாக்கெட் டில் 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 13.5 கிராம் குளுக் கோஸ், 1.5 கிராம் பொட்டாசி யம் குளோரைடு, 2.9 கிராம் ட்ரைசோடியம் சிட்ரேட் ஆகி யவை உள்ளன. நன்கு கொதித்து ஆறிய ஒரு லிட்டர் தண்ணீரில் ஓஆர்எஸ் கரைசலை கலந்து 24 மணி நேரத்துக்குள் பருக வேண்டும்.

பல்வேறு பெயர்களில் பானங்கள்: அதேநேரம், திரவ நிலையில் உப்பு சர்க்கரை கரைசல் பானங்கள் பல்வேறு பெயர் களில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த பானங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை மட்டுமே தரக் கூடும்.

அதில் உள்ள தாது உப்புகள், குளுக்கோஸ் ஆகியவை உலக சுகாதார நிறு வனம் அறிவுறுத்திய வகையில் இல்லாததால், அதனை பருகுவதால் மருத்துவ ரீதியாக நீர்ச்சத்து இழப்பை சரி செய்ய முடியாது.

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த உப்பு - சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகவும், தனியார் மருந்தகங்களில் குறைந்த கட்டணத்திலும் வழங்கப்படுகிறது. உடலில் நீர்ச்சத்து இழப்பை தடுக்க, அதனை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT