மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

இந்தியாவின் பெருமையான மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி அந்தஸ்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கள ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: டென்​மார்க்கை சேர்ந்த சுற்​றுச்​சூழல் கல்வி அறக்​கட்​டளை நிறு​வனம், உலகம் முழு​வதும் உள்ள பல்​வேறு கடற்​கரைகளின் தூய்​மை, திடக்​கழிவு மேலாண்​மை, சுற்​றுச் ​சூழல் பாது​காப்​பு, சுற்​றுலா வளர்ச்சி உள்ளிட்ட பல்​வேறு அம்​சங்​களை ஆராய்ந்து சர்​வ​தேச அங்கீ​காரத்​துக்​கான நீலக்​கொடி சான்​றிதழை அளித்துவரு​கிறது.

தமிழகத்​தில் ஏற்​கெனவே கோவளம் கடற்​கரைக்கு அந்த சான்​றிதழ் கிடைத்​துள்​ளது. இந்​நிலை​யில், உலகின் 2-​வது பெரிய கடற்​கரை​ மற்றும் இந்​தி​யா​வின் மிக நீள​மான சுமார் 13 கிமீ தூர​முடைய மெரினா, திரு​வான்​மியூர் உள்​ளிட்ட 6 கடற்​கரைக்​கும் நீலக்​கொடி சான்​றிதழ் பெற தமிழக அரசு முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறது.

இதற்​காக மெரினா கடற்​கரை​யில் ரூ. 5.60 கோடி​யில் இரும்பு நடை​பாதை, சைக்​கிள் தடங்​கள், விளை​யாட்டு பகு​தி, மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சக்கர நாற்​காலி பாதை, நிழற்​குடைகள், விளை​யாட்டு சாதனங்​கள், திறந்​தவெளி உடற்​ப​யிற்சி கூடங்​கள், சுழலும் கண்​காணிப்பு கேம​ராக்​கள், கடற்​கரைக்கு மெரு​கூட்​டும் மரங்​கள், இருக்​கைகள், குப்பை தொட்​டிகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதன் ஒரு பகு​தி​யில் மெரினாவில் உள்ள நடை​பாதை கடைகளும் சீரமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில், மெரினாவில் தனக்​கும் கடை ஒதுக்​கக்​கோரி தேவி என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார். பி.டி.ஜெகதீஷ் சந்​திரா ஆகியோர், மாநக​ராட்சி மற்​றும் சுற்​றுச்​சூழல் துறை சார்​பில் மெரினா கடற்​கரை​யில் கடைகள் ஒதுக்​கீடு தொடர்​பான அறிக்கை தெளிவற்ற நிலை​யில் இருப்​ப​தாகக் கூறினர்.

இதையடுத்​து, நீதிப​தி​கள் மெரினாவில் நேற்று கள ஆய்வு மேற்​கொண்​டனர். இந்த ஆய்​வின்​போதுமாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே, மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், காவல் ஆணை​யர் ஏ.அருண் ஆகியோர் உடனிருந்தனர். அப்​போது நீதிப​தி​கள், மெரினாவின் உள்​கட்​டமைப்பு தொடர்​பான வரைபடத்தை ஆய்வு செய்து கடைகள் ஒதுக்​கீடு செய்​வதற்​கான வழி​முறை​களை அதி​காரி​களிடம் கேட்​டறிந்​தனர்.

மேலும், இந்த கடைகள் எக்​காரணம் கொண்​டும் சுற்​றுலாப் பயணி​களுக்​கும், உள்​ளூர் பொது​மக்​களுக்​கும் இடையூறாக இருக்​கக்​கூ​டாது என்​றும், பொது​மக்​கள் சுதந்​திர​மாக கடல் அழகை கண்​டு​களிக்க ஏற்​பாடு​களை செய்ய வேண்​டும் என்​றும், இந்​தி​யா​வின் பெரு​மை​யாக கருதப்​படும் மெரினாவுக்கு நீலக்​கொடி அந்​தஸ்து கிடைக்​கும் வகை​யில் உரிய நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என்​றும் அதி​காரி​களிடம் அறி​வுறுத்​தினர். பின்​னர் இது தொடர்​பாக தகுந்த உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும் என்​றும் நீதிப​தி​கள்​ தெரிவித்​தனர்​.

SCROLL FOR NEXT