தமிழகம்

சென்னை: ஓடும் ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பயணியை காப்பாற்றிய ஆர்பிஎஃப் காவலருக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பயணியை, ஆர்பிஎஃப் காவலர் சாதுரியமாகச் செயல்பட்டு காப்பாற்றினார். அக்காவலரை பொதுமக்கள், ஆர்பிஎஃப் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 7-வது நடைமேடையிலிருந்து திருச்சியை நோக்கி சோழன் விரைவு ரயில் ஞாயிற்றுக் கிழமை காலை புறப்பட்டது. ரயில் மெதுவாக நகரத் தொடங்கிய நேரத்தில், ஆண் பயணி ஒருவர் ஓடி வந்து அதன் பின்பக்க பொதுப் பெட்டியில் ஏற முயன்றார்.

அப்போது அவர் நிலை தடுமாறி, ரயிலில் ஆபத்தான முறையில் தொங்கியபடி இழுத்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎஃப் காவலர் தீபக், மின்னல் வேகத்தில் செயல்பட்டு அப்பயணியை காப்பாற்றினார்.

காவலரின் இந்த துரித நடவடிக்கையால் பெரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. அதோடு ரயில் போக்குவரத்தும் பாதிக்கவில்லை. பயணியை காப்பாற்றிய ஆர்பிஎஃப் காவலரை பொதுமக்கள் மற்றும் எழும்பூர் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் சுனில்குமார் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர். காவலர் தீபக்கின் இந்த வீரச் செயலுக்கு சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

SCROLL FOR NEXT