தமிழகம்

தமிழகத்தில் 2013-ல் தேர்வு செய்யப்பட்ட 23 மாவட்ட நீதிபதிகளின் நியமனம் செல்லும்: ஐகோர்ட்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் கடந்த 2013-ம் ஆண்டு 23 மாவட்ட நீதிப​தி​கள் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது.

இந்த ​பணி​யிடங்​களுக்கு தேர்வு செய்​யப்​பட்ட 23 மாவட்ட நீதிப​தி​களின் குற்​றப் பின்​புலம் முறை​யாக ஆராயப்​பட​வில்​லை, தேர்​வாகி​யுள்ள பலர் குறைந்​தது 7 ஆண்​டு​கள் வழக்​கறிஞ​ராக பயிற்சி மேற்​கொள்​ள​வி்ல்​லை. தேர்​வில் இன சுழற்சி மற்​றும் இடஒதுக்​கீடு முறை​யாக பின்​பற்​றப்​பட​வில்​லை. தரவரிசைப்​பட்​டியலில் குளறு​படிகள் உள்​ளதால் தகு​தி​யற்ற பலர் தேர்​வாகி​ உள்ளனர். 23 பேரின் தேர்​வுப்​பட்​டியலை ரத்து செய்து மீண்​டும் திருத்​திய தேர்​வுப்​பட்​டியலை வெளி​யிட வேண்​டும், எனக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 2013, 2014 கால​கட்​டத்​தில் 3 வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

பல ஆண்​டு​களாக நிலு​வை​யில் இருந்து வந்த வழக்​கு​கள் மீதான விசா​ரணை நீதிப​தி​கள் அனிதா சுமந்த், மும்​முனேனி சுதீர் கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது. வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் அளித்த தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 2013-ம் ஆண்டு மாவட்ட நீதிப​தி​களாக தேர்​வாகி 12 ஆண்​டு​களாக அமர்வு நீதிப​தி​களாக பதவி வகித்து வரும் 23 பேருக்கு எதி​ராக தொடரப்​பட்​டுள்ள வழக்​கு​களில் கூறப்​பட்​டுள்ள குற்​றச்​சாட்​டு​கள் பொது​வாக உள்​ளன. 23 மாவட்ட நீதிப​தி​களை தேர்வு செய்​வதற்​காக மூத்த நீதிப​தி​கள் கொண்ட தேர்​வுக்​குழு நியமிக்​கப்​பட்டு நியமனம் முறை​யாக நடந்​துள்​ளது.

எழுத்​துத் தேர்வு மற்​றும் நேர்​முகத் தேர்வு நடை​முறை​கள் விதி​முறை​களின்​படியே நடந்​துள்​ளது. இது​போன்ற ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களின் அடிப்​படை​யில் மாவட்ட நீதிப​தி​களின் தேர்வு நடை​முறை​யில் தலை​யிட முடி​யாது. எனவே, 2013-ம் ஆண்டு தேர்​வான 23 மாவட்ட நீதிப​தி​களின் நியமனம் செல்​லும் என்​ப​தால் அதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கு​களை தள்​ளு​படி செய்​கிறோம். இவ்​வாறு நீதிப​தி​கள் தங்​கள்​ தீர்ப்​பில்​ கூறி​யுள்​ளனர்​.

SCROLL FOR NEXT