கோப்புப் படம் 
தமிழகம்

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,724 தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் தற்​காலிக​மாக நிரப்​பப்​பட​வுள்ள 4,724 செவிலியர் பணி​யிடங்​களுக்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

தேசிய நலவாழ்வு இயக்​கத்​தின் கீழ் பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய் தடுப்பு மருந்​துத்​துறை, மருத்​து​வம் மற்​றும் ஊரக சுகா​தா​ரப் பணி​கள், மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம், சென்னை மாநக​ராட்சி ஆகிய​வற்​றின் கீழ் உள்ள மருத்து​வ​மனை​களில் உள்ள செவிலியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட​வுள்​ளன.

தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் அமலில் இருக்​கும் திருப்​பூர் மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களைத் தவிர இதர மாவட்​டங்​களில், மாவட்ட நலவாழ்வு சங்​கங்​களின் கீழ்செயல்​படும் அனைத்து சுகா​தார நிலை​யங்​கள், மருத்​து​வ​மனை​களில் உள்ள செவிலியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்பட உள்​ளன.

தற்​காலிக அடிப்​படை​யில் ஒப்​பந்த முறை​யில் நிரப்​பப்​பட​வுள்ள 4,724 காலிப்​பணி​யிடங்​களுக்​கான விண்​ணப்​பம் மற்​றும் மாவட்ட வாரி​யாக காலிப்​பணி​யிடங்​களின் விவரம் ஆகிய​வற்றை https://nhm.tn.gov.in/ என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பத்​துடன் கல்​வித்​தகு​தி, அடை​யாளச் சான்​று,புகைப்​படம் உள்​ளிட்ட ஆவணங்​களை இணைத்​து, அந்​தந்த மாவட்ட சுகா​தார அலு​வலருக்கு செப்​.25-ம் தேதி மாலை 5 மணிக்​குள்​ அனுப்​ப வேண்​டும்​.

SCROLL FOR NEXT