எடப்பாடி பழனிசாமி |கோப்புப் படம்

 
தமிழகம்

இன்று முதல் 3 நாட்களுக்கு விருப்ப மனுக்களை பெறலாம்: இடைத்தேர்தலை ஒட்டி அதிமுக அறிவிப்பு

மோகன் கணபதி

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்சியின் தலைமையகத்தில் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தது.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோர், தலைமைக் கழகத்தில் இன்று (8.9.2026) முதல் 10.9.2026 வியாழக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் அதற்கான படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, 10.9.2026 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்​தில் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு இரண்​டிலும் முதல்​வர் விஜய் வெற்றி பெற்​றார். முதல்​வ​ராகப் பதவி ஏற்ற பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார்.

பின்​னர், சி.​விஜய​பாஸ்​கர் (விராலிமலை), எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் (கரூர்), மரகதம் குமர​வேல் (மது​ராந்​தகம்), ஜெயக்​கு​மார் (பெருந்​துறை), சத்​தி​ய​பாமா (தா​ராபுரம்), இசக்கி சுப்​பையா (அம்​பாச​முத்​திரம்) ஆகிய 6 அதி​முக எம்​எல்​ஏக்​கள் பதவியை ராஜி​னாமா செய்து​விட்டு தவெக​வில் இணைந்​தனர்.

இதில், திருச்சி கிழக்​கு, விராலிமலை, கரூர், பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம் ஆகிய 5 தொகு​தி​கள் தொடர்​பான தேர்​தல் வழக்கு நிலுவை​யில் உள்​ளது. இந்நிலையில், மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்​ளது.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மது​ராந்​தகம் தொகு​தி​யில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட மரகதம் குமர​வேல் 69,298 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். தவெக வேட்​பாளர் எழில் கேத்​ரின் 62,090, திமுக வேட்​பாளர் அமுலு பொன்​மலர் 59,838, நாதக வேட்​பாளர் ஜானகி​ராமன் 4,950 வாக்​கு​களை பெற்​றனர். எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்த மரகதம் குமர​வேலுக்கு மாநில துணை பொதுச் செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டது.

இந்த நிலை​யில், அத்​தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் போட்டியிடுவாரா, ஏற்​கெனவே போட்​டி​யிட்ட எழில் கேத்​ரினுக்கு வாய்ப்பு கிடைக்​குமா என்ற எதிர்​பார்ப்பு ஏற்​பட்​டுள்​ளது. தாராபுரம் தொகு​தி​யில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட சத்தியபாமா 81,100 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார்.

திமுக வேட்​பாளர் இந்​தி​ராணி 64,373, கவுரி சித்ரா 46,438, நாதக வேட்​பாளர் திவ்யா 6,026 வாக்​கு​களைப் பெற்​றனர். எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்த சத்​தி​ய​பா​மா, திருப்​பூர் கிழக்கு மாவட்ட இணைச் செய​லா​ள​ராக உள்​ளார். தாராபுரம் தொகு​தி​யில் சத்​தி​ய​பா​மாவை வேட்​பாள​ராக அறிவிக்க அதி​கம் வாய்ப்பு உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக அலையை மீறி மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களி​லும் அதி​முக வெற்றி பெற்​றது. அதனால், அந்த 2 தொகு​தி​களில் மீண்​டும் வெற்றி பெறும் முனைப்​பில் அதி​முக உள்​ளது. திமுக​வும் வேட்​பாளர்​களை நிறுத்த முடிவு செய்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இடைத்​தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் நாளை (செப்​.9) தொடங்​கு​கிறது. செப்​.16-ம் தேதி மனு​தாக்​கல் செய்ய கடைசி நாள். வேட்பு மனுக்​கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி நடை​பெறுகிறது. மனுக்​களை திரும்​பப் பெற 19-ம் தேதி கடைசி நாள். அக்​.6-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறும். வாக்கு எண்​ணிக்கை அக்​.9-ம் தேதி நடக்​கிறது. அனைத்​து தொகு​தி​களி​லும்​ தேர்​தல்​ நடத்​தை வி​தி​கள்​ அமலுக்​கு வந்​துள்​ளன.

SCROLL FOR NEXT