தமிழகம்

மாநகராட்சி மருத்துவமனைகளில் 512 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

​சென்னை: மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னை​யில் உள்ள மாநகராட்சி மருத்​து​வ​மனை​கள் மற்​றும் அரசு மருத்​து​வ​மனை​களில் காலி​யாக உள்ள 512 தற்​காலிக செவிலியர் பணி​யிடங்​களை நிரப்ப திட்​ட​மிட்​டுள்​ளது.

அரசு வழி​காட்​டு​தலின்​படி தற்​காலிக செவிலியர் காலிப் பணி​யிடங்​களுக்கு 50 வயதுக்கு மிகாமல் செவிலியர் பட்​டயப்​படிப்​பு, இளங்​கலை செவிலியர் பட்​டம் பெற்​றவர்​கள், தமிழ்​நாடு நர்​சிங் கவுன்​சிலில் பதிவு செய்​தவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம்.

இதற்​கான விண்​ணப்​பப் படிவங்​கள் மற்​றும் வழி​காட்டு நெறி​முறை​களை சென்னை மாநக​ராட்​சி​யின் இணை​யதளத்​தில் (www.chennaicorporation.gov.in) பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

முறை​யான படிவத்​தில் பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்​களை மாநகர நல அலு​வலர் மற்​றும் உறுப்​பினர் செயலர், சென்னை மாநகர நலச் சங்​கம், பொது சுகா​தா​ரத்​துறை, ரிப்​பன் கட்​டிட வளாகம், 3-ம் தளம், அம்மா மாளி​கை, ஈவெரா பெரி​யார் சாலை, சென்​னை-600 003 என்ற முகவரிக்கு செப்​.25-ம் தேதி மாலை 5 மணிக்​குள் நேரிலோ, அஞ்​சல் மூல​மாகவோ அளிக்​கலாம். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT