சிதம்பரம் நடராஜர் கோயில் | கோப்புப் படம் 
தமிழகம்

சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிதம்​பரம் நடராஜர் கோயில் நிர்​வாகத்​தைக் கண்​காணிக்க ஓய்வு​பெற்ற நீதிப​தி​கள் குழுவை அமைத்து சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தீட்​சிதர்​கள் தரப்​பில் மேல்​முறையீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது

சிதம்​பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நின்று பக்​தர்​கள் தரிசனம் செய்ய அனுமதி​ அளித்து அறநிலை​யத் துறை பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து பொது தீட்​சிதர்​கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. அதேபோல், அரசாணைக்கு ஆதர​வாகவும் வழக்​கு​கள் தொடரப்​பட்​டிருந்​தன.

இந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், ‘சிதம்​பரம் நடராஜர் கோயில் நிர்​வாகத்​தில் உள்ள சீர்​கேடுகள் களை​யப்​படும் வரை நிர்​வாகத்தை கவனிக்க, ஓய்வு​பெற்ற உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார் உள்​ளிட்​டோரை கொண்ட இடைக்​கால நிர்​வாகக் குழுவை அமைத்து உத்​தர​விட்​டது.

மேலும், அக்​குழு​வில், முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி ராஜேந்​திரனை உறுப்​பின​ராகவும், பொது தீட்​சிதர்​கள் சங்​கத்​தின் செய​லா​ளர் மற்​றும் இந்து சமய அறநிலை​யத் துறை செயலர் ஆகியோரை அலு​வல்​சாரா உறுப்​பினர்​களாகவும் நியமித்​தது.

இந்த நிர்​வாகக் குழு​வானது, கனகசபையில் நின்று அனைத்து பக்​தர்​களும் சுவாமி தரிசனம் செய்​ய​வும், தேவாரம், திரு​வாசகம் பாடுவதில் சம வாய்ப்பு வழங்​கப்​படுவதையும் உறுதி செய்ய வேண்​டும். அன்​றாட பூஜைகள், திரு​விழாக்​களை நடத்​து​வது பொது தீட்​சிதர்​களின் பிரத்​யேக உரிமை என்​ப​தால் அதில் நிர்​வாகக் குழு தலை​யிடாது எனவும், கோயி​லின் அன்​றாட வரவு - செலவு கணக்​கு​களை பொது தீட்​சிதர்​கள் ஒவ்​வொரு மாதமும் 5-ம் தேதி நிர்​வாகக் குழு​விடம் ஒப்​படைக்க வேண்​டும் என்​றும் உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​திருந்​தது.

இந்த உத்​தரவை எதிர்த்து கோயில் பொது தீட்​சிதர்​களின் செய​லா​ளர் ஜெ.ஜெயசூர்யா என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீட்டு மனு தாக்​கல் செய்​துள்​ளார். இந்த விவகாரத்​தில் தமிழக அரசு ஏற்​கெனவே உச்ச நீதி​மன்​றத்​தில் கேவியட் மனு தாக்​கல் செய்​திருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT