தமிழகம்

அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சொத்து முடக்​கம் குறித்து அமலாக்​கத் துறை​ அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து அமைச்​சர் ஐ.பெரியசாமி, அவரது குடும்​பத்தினர் தாக்​கல் செய்த மேல்முறையீட்டு மனுக்​களை உச்​ச நீ​தி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

கடந்த 2006-2011 கால கட்​டத்​தில் வீட்டு வசதித் துறை அமைச்​ச​ராக பதவிவகித்த ஐ.பெரியசாமி, வருமானத்துக்கு அதி​க​மாக ரூ.2 கோடியே 1 லட்​சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்ட​தாக லஞ்​சஒழிப்பு போலீ ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

          

இதன் அடிப்​படையில் அமலாக்​கத் துறை​யும் அமைச்​சர் ஐ.பெரியசாமி உள்​ளிட்​டோர் மீது சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச்​சட்​டத்​தின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்​தது.

இதையடுத்து ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்​தில்​கு​மார் எம்எல்ஏ, மகள் இந்​திரா உள்​ளிட்​டோர் வீடு​கள் மற்​றும் அமைச்​சர், எம்​எல்ஏ அலு​வல​கங்​களில் கடந்​தாண்டு ஆகஸ்டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்தி சொத்து ஆவணங்​கள், முதலீடு​கள், வங்கிக் கணக்கு விவரங்​களை பறி​முதல் செய்​தனர்.

அதன் தொடர்ச்​சி​யாக அமைச்​சர் மற்​றும் அவரது குடும்​பத்​துக்​குச் சொந்​த​மான சொத்​துகளை முடக்​கம் செய்​வது தொடர்​பாக அமலாக்​கத் துறை நோட்​டீஸ் பிறப்​பித்​தது.

இதனை ரத்து செய்​யக் கோரி​யும், அமலாக்​கத் துறையின் வழக்கு விசா​ரணைக்கு தடை ​வி​திக்​கக்​கோரி​யும் அமைச்​சர் மற்​றும் அவரது குடும்​பத்தினர் சார்​பில் வழக்கறிஞர்​கள் ரித்துராஜ் பிஸ்​வாஸ் மேல்​முறை​யீடு மனுக்​களை தாக்​கல் செய்​தார்.

இந்த மனுக்​களை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, சதீஷ் சந்​திர சர்மா அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது. மனு​தா​ரர்​கள் சார்​பில் மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி ஆஜராகி, சொத்து குவிப்பு வழக்கு விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்ளது.

அமலாக்​கத் துறை வழக்கு விசா​ரணை விஜய் மதன்லால் வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​புக்கு எதி​ராக உள்​ளது என வாதிட்​டார். இந்த வாதத்தை நிராகரித்த நீதிப​தி​கள், மேல்​முறை​யீட்டு மனுவை திரும்பப் பெற அனு​மதி அளித்து தள்​ளு​படி செய்தனர்.

SCROLL FOR NEXT