செங்கலபட்டு ஊராட்சிகளில் சேதமடைந்து செயல்பாடின்றி உள்ள மகளிர் சுய உதவி குழு கட்டிடங்களால் அரசின் நிதி வீணாகிறது. அவற்றில் புதர்மண்டி சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது.
தமிழகத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாலெ அரசின் பெண்கள் மேம் பாட்டுக் கழகம் மூலம் முதன்முதலில், 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மகளிர் சுயசார்பு பெற உதவியதால் இக்குழுக்கள் மிக வேகமாக அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டன.
கிராமப்புற பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசு மகளிர் சுய உதவி குழு திட்டத்தை அறிமுகம் செய்தது. இத் திட்டத்தின் மூலம் ஊராட்சிகள் தோறும் பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்கள் தற் போது செயல்பட்டு வருகின்றன. ஊராட் சிகள் தோறும் மகளிர் சுய உதவி குழுக் களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப் பதற்காக கட்டிடங்கள் கட்டப்பட்டன.
இந்த கட்டிடங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தையல் பயிற்சி, கூடை முடைதல், சலவை சோப்பு தயாரித்தல், வீட்டு பராமரிப்புக்கான பினாயில் தயாரிப்பு, சாம்பிராணி, ஊதுபத்தி, சூடம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பதுகுறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற் சியை பெற்ற மகளிர் குழுக்கள் குழுவாக சேர்ந்தும் தனித்தனியாக வீடுகளிலும் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலமும் தாங்களாகவும் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்தனர். இதற்கு ஊராட்சிகள் தோறும் கட்டப்பட்டிருந்த மகளிர் சுய உதவி குழு கட்டிடங்கள் மகளிருக்கு உதவியாக அமைந்திருந்தது.
இதனிடையே காலப் போக்கில் இக்கட்டிடங்கள் பராமரிப்பின்றி கூரை இடிந்து விழுந்தும் மின் இணைப்பு இன்றியும் சேதமடைந்த நிலையில் உள்ளன. பல ஊராட்சிகளில் கட்டிடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 395 ஊராட்சிகளில் மகளிர் குழு கட்டிடங்கள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன. அவற்றில் 90 சத வீத கட்டிடங்கள், பல ஆண்டுகளாக பாழாகியும் உள்ளன. இதனால் மகளிர் குழு கூட்டங்கள், கோயில், திண்ணை, வீடுகளின் மரத்தடியில் நடத்தப்படுகின்றன.
மகளிர் குழுவை சேர்ந்த செண்பகம் கூறியது: தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடங்கள் மேற்கூரை, தரைத் தளம், பெயர்ந்து சேதமடைந்த நிலையில் பூட்டிக் கிடக்கின்றன. இதனால் மகளிர் சுய உதவி குழு கூட்டங்கள் நடத்த இட வசதி யின்றி தெருவில் சந்தித்து கூட்டம் நடத்தும் நிலை உள்ளது. கட்டிடங்களை பராமரிப்பதற்கு எங்களால் முடியவில்லை. மாறாக ஒன்றிய, மாவட்ட நிர்வாகம் தான் இதனை மேற்கொள்ள வேண்டும்.
அவர்கள் சரிவர செய்வதில்லை. சில இடங்களில் கட்சி பாகுபாடு பார்ப்பதால் கூட்டங்கள் அனுமதிப்பதில்லை. இதனால் வேறு இடங்களில் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். சேதமடைந்த மகளிர் சுய உதவிக்குழு கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்களை மின் இணைப்புடன், தண்ணீர், கழிப்பறை வசதியோடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.