தமிழகம்

டெண்டர் முறைகேடு புகார்: கே.என்.நேருவிடம் விரைவில் விசாரணை - லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: நக​ராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை டெண்​டர் முறை​கேடு தொடர்​பாக திமுக முன்​னாள் அமைச்​சர் கே.என்​. நேரு​விடம் விரை​வில் விசா​ரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் முடிவு செய்​துள்​ளனர். விசா​ரணை தொடர்​பான அனைத்து தகவல்​களும் திரட்​டப்​பட்ட பின்​னர் நேரு உட்பட அனை​வருக்​கும் சம்​மன் அனுப்பி நேரில் வரவழைத்து வி​சா​ரணை நடத்​தப்​படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை அமைச்​ச​ராக கே.என்​.நேரு பதவி வகித்​தார். அந்த கால​கட்​டத்​தில் துறை​யில் பல்​வேறு டெண்​டர்​கள் வழங்​கிய​தில் முறை​கேடு​கள் நடந்​த​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன.

இதற்​கிடையே, கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரனுக்கு சொந்​த​மான கோவை அலு​வல​கத்​தில், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் தொடர்​பான குற்​றச்​சாட்​டின் பேரில் கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் அமலாக்​கத் ​துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

அப்​போது கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​களின் அடிப்​படை​யில், கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத்​ துறை கடிதம் அனுப்​பியது.

அதில், நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில் ஊழல் நடை​பெற்​றுள்​ள​தாக​வும், இதுதொடர்​பாக வழக்​கு ​ப​திவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும் பரிந்​துரைத்​தது.

ஆனால், நடவடிக்கை எடுக்​கப்​ப​டாத நிலை​யில், கடந்த டிசம்​பர் மாதம் தமிழக அரசுக்கு அமலாக்​கத்​ துறை மீண்​டும் கடிதம் அனுப்​பியது.

அதில், ரூ.1,020 கோடி லஞ்​சம் கொடுக்​கப்​பட்​டதற்​கான ஆதா​ரங்​கள் கிடைத்​துள்​ள​தாக​வும், கே.என்​. நேரு மீது வழக்​கு ​ப​திவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும் தெரிவிக்​கப்​பட்டு இருந்​தாக கூறப்​படு​கிறது.

இந்த விவ​காரம் தொடர்​பாக அதி​முக எம்​.பி. இன்​பதுரை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், அமலாக்​கத் ​துறை அளித்த கடிதத்​தின் அடிப்​படை​யில் கே.என்​.நேரு மீது லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​கு ​ப​திவு செய்ய வேண்​டும் என்று கடந்த பிப்​ர​வரி மாதம் உத்​தர​விட்​டது.

இதைத்​ தொடர்ந்​து, முறை​கேடு குற்​றச்​சாட்​டில் கே.என்​.நேரு மீது வழக்​கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி அவர் சென்னை உயர் நீதி​மன்​றத்தை நாடி​னார். வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், கே.என்​.நேரு மீது மேற்​கொண்டு நடவடிக்கை எடுக்​கக்​கூ​டாது என்று லஞ்ச ஒழிப்பு போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், டெண்​டர் முறை​கேடு தொடர்​பாக கே.என்​.நேரு, அவரது சகோ​தரர்​கள் மற்​றும் அவர்​களுக்கு தொடர்​புடைய வீடு​கள், அலு​வல​கங்​கள் என சென்​னை, கோவை, திருச்​சி, ஈரோடு, திருப்​பூர் உள்​ளிட்ட இடங்​களில் மொத்​தம் 30 இடங்​களில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் நேற்று முன்​தினம் சோதனை நடத்​தினர்.

சோதனை​யில் முறை​கேடு தொடர்​பான 241 ஆவணங்​கள் மற்​றும் மின்​னணு ஆதா​ரங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுஒரு​புறம் இருக்க, தன் மீதான குற்​றச்​சாட்​டு​களை கே.என்​.நேரு திட்​ட​வட்​ட​மாக மறுத்​துள்​ளார்.

இந்​நிலை​யில், கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் மற்​றும் மின்​னணு ஆதா​ரங்​களில் உள்ள தகவல்​களை தொழில்​நுட்ப வல்​லுநர்​களின் உதவி​யுடன் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

விசா​ரணை தொடர்​பான அனைத்து தகவல்​களும் திரட்​டப்​பட்ட பின்​னர், வழக்​கில் தொடர்​புடைய அனை​வருக்​கும் சம்​மன் அனுப்பி நேரில் வரவழைத்து வி​சா​ரணை நடத்​தப்​படும். கே.என்​.நேரு மற்​றும் அவரது சகோ​தரர்​களிட​மும் வி​சா​ரணை நடத்​தப்​படும்​ என்று லஞ்​ச ஒழிப்​பு போலீ​ஸார்​ தெரிவித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT