தமிழகம்

பாஜக செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏஎன்எஸ் பிரசாத் நீக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் பொறுப்​பில் இருந்து ஏஎன்​எஸ் பிர​சாத் நீக்​கப்​பட்​டுள்​ள​தாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக​வில் மாநில செய்​தித் தொடர்​பாள​ராக பதவி வகித்து வந்​தவர் ஏஎன்​எஸ் பிர​சாத். கட்​சி​யின் தேர்​தல் பணிக்​குழு​விலும் இடம் பெற்​றிருந்​தார். இந்த 2 பொறுப்​பு​களில் இருந்​தும் அவர் உடனடியாக விடுவிக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

          

தவெக தலை​வர் விஜய், தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இணைய வேண்​டும் என்று ஏஎன்​எஸ் பிர​சாத் அறிக்கை வெளி​யிட்​டிருந்​தார். கட்சி தலை​மை​யின் ஒப்​புதல் இன்​றி, விஜய்யை கூட்​ட​ணிக்கு அழைத்​த​தால் கட்சி மேலிடம் இந்த நடவடிக்​கையை எடுத்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT