காஞ்சிபுரம்: செங்கை, காஞ்சிபுரம், பரந்தூர் உள்ளிட்ட இடங்களில் பள்ளி வாகனங்களின் வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட பள்ளி வாகனங்களின் வருடாந்திர கூட்டாய்வு, ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.
604 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண் டியுள்ளது. அதில் நேற்று முதல் கட்டமாக 432 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மேலும், 30 வாகனங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும், 30 வாகனங்களில் குறைகள் காணப்பட்டதால் வாகன தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்து தகுதி சான்றை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது செங்கை கோட்டாட்சியர் ரம்யா, இணை போக்குவரத்து ஆணையர் (தெற்கு சரகம்) பொன் செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி உடனிருந்தனர்.
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 541 தனியார் பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. புதியகல்வி ஆண்டு தொடங்க உள்ளதை ஒட்டி இந்த வாகனங்களுக்கான கூட்டு ஆய்வு தாம்பரம் அருகே நேற்று நடத்தப்பட்டது. தாம்பரத்தை அடுத்த கரசங்காலில், தாம்பரம் கோட்டாச்சியர் முரளி, தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வில் 440 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், பல்வே று குறைபாடுகள் கண்டறியப்பட்ட, 35 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் கண்ட றியப்பட்ட குறைபாடுகளை முழுமையாக சரிசெய்து, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே, அந்த வாகனங்களை இயக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங் களுக்கு வட்டரா போக்குவரத்து அலுவலர்கள் அறிவுறுத் தினர்.
காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக் அலி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
சான்றுகள் சரி பார்ப்பு: புதிய கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்த முகாமில், இப்பகுதியில் உள்ள பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 340 பள்ளி வாகனங்கள் பங்கேற்றன. அதிகாரிகள் குழுவினர் வாகனங் களின் அவசரக்கால கதவுகள், முதலுதவிப் பெட்டிகள், தீயணைப்புக் கருவிகள், படிக்கட்டுகளின் உயரம் மற்றும் ஓட்டுநர்களின் தகுதிச் சான்றுகளைத் தனித் தனியாகச் சரி பார்த்தனர்.
இந்த ஆய்வின்போது, முறையாகப் பாதுகாப்பு விதிகளையும் பராமரிப்பு நெறிமுறைகளையும் பின்பற்றாத 21 வாகனங்களுக்குத் தற்காலிகமாக இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட அந்த வாகனங்களில் உள்ள குறைகளை முழுமையாகச் சரி செய்து, மீண்டும் தகுதிச் சான்று பெற்ற பின்னரே அவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.