சென்னை: பொதுப் பார்வையாளர்களிடம் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்களிடம் பொதுமக்கள், தொகுதியின் தேர்தல் அலுவலகங்களில் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளுக்கு பொதுப் பார்வையாளர் தேம்ஜென்வாபாங் ஆவோவிடம், 89258 15411 எண்ணில் புகாரளிக்கலாம், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளுக்கு விக்ரம் குமார் - 89258 15413, திரு.வி.க.நகர், எழும்பூர் தொகுதிகளுக்கு ஜி.ஸ். சஹோடா - 89258 15415, ராயபுரம், துறைமுகம் தொகுதிகளுக்கு எஸ்.எல்.நவீன் - 89258 15417, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு தொகுதிகளுக்கு சுதிர் பாரா - 89258 15419, அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளுக்கு ரஞ்சித் குமார் சிங் - 89258 15421, சைதாப்பேட்டை, தியாகராய நகர் தொகுதிகளுக்கு நான்சி சஹாய் - 89258 15423, மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதிகளுக்கு 89258 15425 ஆகிய எண்களில் மக்கள் புகார் அளிக்கலாம்.