தமிழகம்

“எஸ்ஐஆரில் 80 லட்சம் பேரை நீக்கச் சொன்னோம்” - அண்ணாமலை தகவல்

செய்திப்பிரிவு

“எஸ்ஐஆர் மூலம் தமிழகத்தில் 80 லட்சம் பேர் வரை நீக்கப்பட வேண்டும் என்று பாஜக தெரிவித்திருந்தது” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமைச்சர் நேருவின் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை 2-வது முறையாக கடிதம் அனுப்பியும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாட்ஸ்அப் மூலம் கட்சி நிதி என்ற பெயரில் ஊழல் பணம் கைமாறியுள்ளது. இந்தியாவில் எங்கும் நடக்காத அநியாயம் தமிழகத்தில் நடக்கிறது.

எஸ்ஐஆர் பணி மூலம் தமிழகத்தில் 80 லட்சம் பேர் வரை நீக்கப்பட வேண்டும் என்று பாஜக தெரிவித்திருந்தது. தற்போது 77 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது 12.5 சதவீதம் வாக்காளர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2026 தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

SCROLL FOR NEXT